Cinema History
மணிரத்தினத்துக்கு எவ்வளவோ செஞ்சிருக்கேன்; அவருக்கே தெரியாது: இளையராஜா சொன்ன சீக்ரெட்
தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்களின் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் மணிரத்தினம். காதல் காட்சிகளைக் கொண்ட அவரது திரைப்படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் வரவேற்பு உண்டு.
அலைபாயுதே, ரோஜா, உயிரே, ஓகே கண்மணி போன்ற காதலை முன்னிலைப்படுத்தி மணிரத்தினம் இயக்கிய திரைப்படங்கள் எப்போதும் மக்கள் மத்தியில் பிரபலமாகவே இருக்கின்றன.
திரைப்படங்களை இயக்கத் தொடங்கிய காலம் முதலே மணிரத்தினம் தனக்கென ஒரு கூட்டணியை வைத்திருந்தார். இதை மூவர் கூட்டணியினர் என கூறுவார்கள். மணிரத்தினம் படத்தில் பெரும்பாலும் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருப்பார், வைரமுத்துதான் பாடல்களுக்கு வரிகளை எழுதியிருப்பார் .
இந்த காம்போ தமிழ் சினிமாவில் நல்ல வெற்றியை கொடுத்ததால் அது அப்படியே தொடர்ந்தது. ஆனால் ஏ.ஆர் ரகுமானுக்கு முன்பு இசையமைப்பாளர் இளையராஜாதான் மணிரத்தினத்தின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்தார். அதில் நாயகன், தளபதி, அஞ்சலி போன்ற படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதில் இளையராஜாவின் இசைக்கும் முக்கிய பங்கு உண்டு.
இளையராஜா செய்த உதவி:
ஆனால் ரோஜா படத்தின்போது ஏற்பட்ட மனஸ்தாபத்தின் காரணமாக இருவரும் பின்னர் பிரிந்து விட்டனர். இளையராஜா ஒரு பேட்டியில் கூறும் பொழுது ஆரம்ப கட்டத்தில் மணிரத்தினத்திற்கு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அப்போது மணிரத்தினத்திற்காக குறைந்த காசை மட்டும் வாங்கிக் கொண்டு அவருக்கு நான் படங்களுக்கு இசையமைத்து கொடுத்திருக்கிறேன். மேலும் அவருக்காக மற்ற இயக்குனர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் பேசி அவருக்கு வாய்ப்புகளையும் வாங்கி தந்துள்ளேன். இதையெல்லாம் அப்போதே நான் மணிரத்தினத்திற்கு தெரியாமலே செய்திருக்கிறேன் என கூறியுள்ளார் இளையராஜா.