2 மணி நேரத்தில் 5 பாடல்கள்!.. தளபதி விஜய் படத்தில் இசைஞானி செய்த செம மேஜிக்!...
இளையராஜா திறமையான இசையமைப்பாளர் மட்டுமல்ல. மிகவும் வேகமாக வேலை செய்பவர். அதிகாலை 6 மணிக்கெல்லாம் தனது வேலையை துவங்கி விடுவார். ஒரு நாளில் 3 படத்திற்கான பாடல்களுக்கு மெட்டமைப்பது மற்றும் அதை ஒலிப்பது செய்து கொடுப்பது என பரபரப்பாக வேலை செய்தவர்.
உலகில் எந்த இசையமைப்பாளரும் இளையராஜாவை போல மிகவும் வேகமாக இசை குறிப்புகளை எழுத முடியாது என்றே சொல்லலாம். ஒரு படத்திற்கான பாடலை சில மணி நேரங்களில் முடித்து உடனே பாடகர்கள், பாடகிகளை வரவழைத்து ரிக்கார்டிங் செய்து முடித்துவிடுவார். அதோடு, சில படங்களின் பின்னணி இசை வேலையும் ஒருபக்கம் நடக்கும்.
இதையும் படிங்க: இப்படி ஒரு டார்ச்சரா? வேறு வழியில்லாமல் மாட்டிக்கிட்டு முழிக்கும் ரஜினி.. தலைவரு பாவம்தான்
80,90களில் இப்படித்தான் பல படங்களுக்கும் இளையராஜா இசையமைத்தார். அதனால்தான் ஆயிரம் படங்களுக்கும் மேல் அவரால் இசையமைக்க முடிந்திருக்கிறது. பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த தாரை தப்பட்டை படம் ராஜாவுக்கு ஆயிரமாவது திரைப்படமாகும். இன்னமும் அதே வேகத்துடன்தான் ராஜா இசையமைத்து வருகிறார்.
இப்போதுள்ள சில இசையமைப்பாளர்கள் ஒரு பாடலுக்கு பல மாதங்களை எடுத்துகொள்கிறார்கள். ஒரு படத்திற்கான முழு பாடலையும் கொடுக்க 6 மாதங்களை எடுத்துக்கொள்ளும் இசையமைப்பாளர்களும் உண்டு. இவர்கள் எல்லாம் ராஜாவின் பாடம் கற்க வேண்டும். இப்போது இருக்கும் இசையமைப்பாளர்களுக்கு இளையராஜாவின் நேர்த்தியெல்லாம் வரவே வராது.
இதையும் படிங்க: விஜயகாந்த் இல்லாமலும் ஹிட்டு கொடுப்பேன்!.. சரித்திர சாதனையை நிகழ்த்திய இணைந்த கைகள்!..
இளையராஜாவின் இசையில் நடிகர் விஜய் சில இனிமையான பாடல்களை பாடியிருக்கிறார். ஆனால், முதன் முதலாக ராஜாவின் இசையில் அவர் பாடியது ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில்தான். இந்த படத்தில் மொத்தம் 5 பாடல்கள். இந்த பாடல்கள் அனைத்தையும் 2 மணி நேரத்தில் போட்டு கொடுத்துவிட்டாராம் இளையராஜா.
இந்த படத்தில்தான் விஜயுடன் இணைந்து நடிகர் அஜித்தும் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்தார். ராஜாவின் இசையில் காதலுக்கு மரியாதை, பிரண்ட்ஸ் உள்ளிட்ட சில படங்களில் விஜய் சில இனிமையான பாடல்களை பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.