மத்தவங்க பேசட்டும்!.. எனக்கு வேலை இருக்கு!.. இளையராஜா வெளியிட்ட வீடியோ...

by சிவா |   ( Updated:2024-05-16 08:40:01  )
ilayaraja
X

தமிழ் சினிமாவில் தனது இசையால் ஒரு கலக்கு கலக்கியவர்தான் இளையராஜா. 70களின் பாதியில் அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக நுழைந்த இளையராஜா தனது இசையால் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். நாட்டுப்புற இசையை மண்வாசனை கலந்து இளையராஜா கொடுத்த விதம் எல்லோரையும் கவர்ந்தது.

எனவே, அவரின் இசைக்காக தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தவம் கிடந்தனர். ஒரு படம் உருவாகும்போது இளையராஜாதான் இசை என தயாரிப்பாளர்கள் முடிவு செய்தனர். அந்த அளவுக்கு படத்தின் வெற்றிக்கு இளையராஜா தேவைப்பட்டார். பாடல்களில் அசத்தினார் என்றால் ஒருபக்கம் பின்னணி இசையிலும் தான் ஒரு மேதை என்பதை நிரூபித்தார்.

இதையும் படிங்க: தளபதி69 படத்தின் கதை இதுதானா? அதுசரி ஏற்கனவே இதே ஸ்டோரிக்கு பல்ப் வாங்கியது தானே!…

ஒரு மொக்கை படத்தை தனது பாடல்களாலும், மொக்கை காட்சியை கூட தனது பின்னணி இசையாலும் ரசிக்க வைத்தார் இளையராஜா. அவரின் இசை இல்லையேல் படமே இல்லை என்கிற நிலைதான் 80களில் இருந்தது. 90களுக்கு பின் ஏ.ஆர்.ரஹ்மான், தேவா போன்ற சிலர் உள்ளே வந்து பல திரைப்படங்களுக்கும் இசையமைத்தனர்.

இப்போது அனிருத் போன்ற புதுப்புது இசையமைப்பாளர்கள் வந்து இளசுகளுக்கு பிடித்தது போல் பாடல்களை போட்டு மார்க்கெட்டை பிடித்துவிட்டனர். ஆனால், இளையராஜாவின் ரசிகர்கள் இன்னமும் அவரின் பாடல்களை மட்டுமே ரசித்து வருகிறார்கள். அதோடு, சமீபத்தில், எனது பாடல்களை என் அனுமதியின்றி யாரும் பயன்படுத்தக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இளையராஜா.

இதையும் படிங்க: நீ என்ன வேணா பண்னு!.. இது மட்டும் மிஸ் ஆகக்கூடாது!. லோகேஷுக்கு கண்டிஷன் போட்ட ரஜினி…

இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. ஆனால், சம்பளம் வாங்கி கொண்டுதான் அவர் இசையமைத்தார். அந்த பாடல்களின் உரிமை தயாரிப்பாளர்களுக்குதான் சொந்தம் என திரையுலகை சேர்ந்த பலரும் கருத்து தெரிவித்தனர். அதோடு, ‘இளையராஜாவுக்கு இருப்பது பேராசை.. இன்னும் பணத்தின் மீது ஆசை போகவில்லையா?’ என்கிற ரீதியில் பலரும் அவரை கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றார் இளையராஜா. ஒரு சிம்பொனிக்கான இசையை அவர் உருவாக்கி வருவதாக செய்திகள் கசிந்தது. இப்போது டிவிட்டரில் வீடியோவில் பேசியுள்ள ராஜா ‘என்னை பற்றி பல செய்திகள் வருகிறது. மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என பார்ப்பது என் வேலை இல்லை. என் வேலைதான் எனக்கு முக்கியம். 35 நாட்களில் ஒரு சிம்பொனிக்கான இசையை எழுதி முடித்திருக்கிறேன். என் ரசிகர்களுக்கு அது மிகவும் பிடிக்கும்’ என பேசியிருக்கிறார்.

Next Story