கல்யாணத்துக்கு போகலனா என்ன?!.. பிரேம்ஜிக்கு பெரியப்பா இளையராஜா செய்த சிறப்பான சம்பவம்!…

Published on: June 11, 2024
premji
---Advertisement---

இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனின் மகன் மற்றும் நடிகருமான பிரேம்ஜிக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. பிரேம்ஜி அவரின் அன்ணன் வெங்கட்பிரபு இயக்கிய ‘சென்னை 28’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். இசை, நடிப்பு இது இரண்டிலுமே பிரேம்ஜிக்கு ஆர்வம் உண்டு.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்த பல திரைப்படங்களில் இசையமைக்கும் பணிகளில் பிரேம்ஜி பணிபுரிந்திருக்கிறார். சென்னை 28-ல் நடிக்க துவங்கியதும் அதன்பின் வெங்கட்பிரபு இயக்கிய சரோஜா, கோவா, மாஸ் என்கிற மாசிலாமணி, மங்காத்தா, பிரியாணி ஆகிய படங்களில் நடித்தார்.

premji

வெங்கட்பிரபு மட்டுமில்லாமல் மற்ற இயக்குனர்களின் இயக்கத்திலும் பிரேம்ஜி சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 45 வயதான பிரேம்ஜி பல வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வலம் வந்தார். இந்நிலையில், சேலத்தை சேர்ந்த இந்து என்கிற பெண்ணோடு அவருக்கு விரைவில் திருமணம் என்கிற செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

மணப்பெண் ஒரு பாடகி, இது காதல் திருமணம் என நிறைய எழுதினார்கள். ஆனால், அவர் ஒரு வங்கியில் வேலை செய்தவர் எனவும், இன்ஸ்டாகிராமில் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இவர்களின் திருமணம் கடந்த 9ம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் நடந்தது.

premji
premji

இதில், கங்கை அமரனின் உறவினர்களும், பிரேம்ஜியின் நண்பர்களும் கலந்து கொண்டனர். இந்த திருமண விழாவில் பிரேம்ஜியின் பெரியப்பா இளையராஜா கலந்துகொள்ளவில்லை. பல வருடங்களாகவே கங்கை அமரன் குடும்பத்தினரிடம் இளையராஜா சரியாக பேசுவதில்லை. எனவேதான், அவர் அங்கு போகவில்லை என கருதப்பட்டது.

இந்நிலையில், இசை தொடர்பான முக்கிய பணி இருந்ததால் இளையராஜாவால் அங்கு செல்ல முடியவில்லை எனவும், திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு பிரேம்ஜி – இந்து இருவரையும் வீட்டிற்கு வரவழைத்து பரிசுப்பொருட்களை கொடுத்து இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தார் என இப்போது செய்திகள் கசிந்திருக்கிறது.