Cinema History
காரில் போகும்போது இளையராஜா என்ன பாடல் கேட்பார்?!. சீக்ரெட் சொல்லும் இயக்குனர்!..
திரிஷா நடிப்பில் வெளியான “மனசெல்லாம்” படத்தை இயக்கிய சந்தோஷ் தற்போது விளம்பர படங்களில் அதிக கவனம் செலுத்துவதோடு, ஓவியம் வரைவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் அடுத்த படம் எடுக்கவும் தயாராகி வருவதாக தனது சமீபத்திய பேட்டியின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
“மனசெல்லாம்” படத்தில் நடிக்க முதலில் வித்யாபாலனைத்தான் அணுகினாராம். ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனதாகவும், அதன் பின்னர்தான் திரிஷா படத்திற்குள் வந்தாராம். தனது மூன்றாவது படமான இதில் நடிக்க கேட்ட உடனே சம்மதம் சொல்லி நடிக்க வந்தாராம். வணிகரீதியாக பெரிய வெற்றி பெறாத போதிலும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜவின் இசை பக்க பலமாக அமைந்தது.
இதையும் படிங்க: அந்த பாட்டை கேட்டுதான் இந்த பாட்டை போட்டேன்… ஆட்டைய போட்டதை ஓபனாக ஒப்புக்கொண்ட இளையராஜா…
ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் வரும் “நீ தூங்கும் நேரத்தில்” பாடல் ரசிகர்களின் காதுகளை கவர்ந்திழுத்தது. இதனை போலவே படத்தில் வந்த மீதி பாடல்களும் வெளியான நேரத்தில் பெயர் பெற்றது. “கையில் தீபம் ஏந்தி வந்தோம்” பாடல் அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றும் ஆகும். படத்தின் பின்னனி இசையும் அருமையாகவே அமைக்கப்பட்டிருந்தது வரவேற்பை பெற்றது.
இப்படி இருக்கையில் இளையராஜா உடனான தனது நெருக்கம் பற்றி பேசிய சந்தோஷ்,
ஒரு முறை திருச்செந்தூருக்கு இளையராஜவுடன் சென்ற தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார். பயனங்களின் போது பாடல்களை கேட்பதை இளையராஜா தவிர்ப்பார் என்று கூறியுள்ளது ஆசரியத்தை ஏற்படுத்தியது. கார் டிரைவர் பாடலை ஆன் செய்த உடனே பாடலின் ஒலி அளவை குறைத்து வைக்க சொன்னாராம். அதோடு மட்டும் அல்லாமல் அதிகமாக பேசுவதையும் தவிர்ப்பாராம்.
இதையும் படிங்க: ஆஸ்கர் விருது வாங்கிறதெல்லாம் பெரிய விஷயமா? அந்த மேடையிலே இப்டி பேசி இருக்காரே இளையராஜா!…
பாடல்களுக்கு இசை அமைக்கும் இளையராஜாவின் வேகத்தை கண்டு தான் வியந்து போனதாகவும், ஒரு பாடலுக்கு அதிக பட்சமாக இருபது நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொண்டதை பார்த்தும் வியந்து போனதாகவும் கூறியிருக்கிறார்.
ஒருமுறை திருச்செந்தூர் சென்றிருந்த போது அந்த ஊர் மக்கள் இளையராஜா மீது வைத்திருந்த அன்பை வெளிப்படுத்தும் விதமாக மீன் இறைச்சி கொடுத்து வரை என்னிடம் சொன்னார். எவ்வளவு உயர்ந்தாலும் இது போன்ற விஷயங்களை ஞாபகம் வைத்து இளையராஜா என்னிடம் சொன்னது மிகுந்த மகிழ்வு தந்த தருனம் என்றும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சந்தோஷ்.