Cinema History
ஒரு வாரத்தில் படம் ரிலீஸ்!.. இளையராஜா செய்த மேஜிக்!.. வசூலை அள்ளிய விஜயகாந்த் படம்!..
70களின் இறுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் இளையராஜா. அன்னக்கிளி திரைப்படம் மூலம் இசையமைக்க துவங்கினார். முதல் படத்திலேயே அசத்தலான இசையை கொடுத்தார். ராஜாவின் இசையைல் இருந்த கிராமிய மணம் பட்டி தொட்டியெங்கும் வீசியது.
80களில் அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளராக இருந்தார் இளையராஜா. அதோடு, பல இனிமையான பாடல்களை கொடுத்து ரசிகர்களை கட்டிப்போட்டார். இளையராஜா வந்த பின்னர்தான் திரைப்படங்களின் பாடல்கள் கேசட் விற்பனை அதிக அளவில் விற்பனை ஆனது.
இதையும் படிங்க: இளையராஜாவை உருகி உருகி காதலித்த பாடகி! இப்போ அவங்க நிலைமை என்ன தெரியுமா?
80களில் பல திரைப்படங்களை காப்பாற்றும் கடவுளாகவும் இருந்தார் இளையராஜா. இளையராஜா மட்டும் இசையமைத்துவிட்டால் படம் ஹிட் என்பதுதான் பெரும்பாலான இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் எண்ணமாக இருந்தது. ராஜவும் பல மொக்கைப்படங்களை தனது இசையால் ஓட வைத்தார்.
ஒரு காட்சியில் இயக்குனர் சொல்ல முடியாததை கூட தனது பின்னணி இசை மூலம் ரசிகர்களுக்கு கடத்திவிடுவார் இளையராஜா. அதுதான் அவரின் பெரிய பலமும் கூட. அதோடு, ஒரு படத்திற்கு 5 பாடல்கள் எனில் 2 மணி நேரத்தில் போட்டு கொடுத்துவிடுவார். கமல் நடித்த குணா படத்திற்கு 4 பாடல்களை 2 மணி நேரத்தில் போட்டு கொடுத்தார் அவர்.
சின்னத்தம்பி படத்தில் வரும் 8 பாடல்களை அரை நாட்களில் போட்டுவிட்டார். கரகாட்டக்காரனுக்கும் அப்படித்தான். இந்த வேகம், இந்த இசை அறிவு எந்த இசையமைப்பாளரிடமும் கிடையாது என்றுதால் சொல்ல வேண்டும். ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து 1990ம் வருடம் வெளியான திரைப்படம்தான் புலன் விசாரணை.
இதையும் படிங்க: கடைசி நேரத்தில் வரிகளை மாற்றிய கங்கை அமரன்!.. கடுப்பாகி கத்திய இளையராஜா!…
ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் என முடிவாகிவிட்டது. ஆனால், ஜனவரி 5ம் தேதி வரை படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். 7ம்தேதிதான் இளையராஜாவிடம் ரீ ரிக்கார்டிங் பணிகளுக்காக பிலிமை கொடுத்திருக்கிறார்கள். 3 நாட்கள் தொடர்ந்து பணியாற்றி இப்படத்திற்கு அற்புதமான பின்னணி இசையை அமைத்தார் இளையராஜா. அதேபோல், விஜயகாந்த் நடித்த ரமணா படத்திற்கு ஒரு வாரத்தில் பின்னணி இசை அமைத்துகொடுத்தார்.