சிவகார்த்திகேயன் விவகாரம்: எல்லாத்தையும் கடவுள் பாத்துப்பான்!.. விரக்தியில் பேசும் டி.இமான்..

by சிவா |
sivakarthikeyan
X

Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என இசையமைப்பாளர் டி. இமான் சில நாட்களுக்கு முன்பு கொடுத்த பேட்டி பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. ஏனெனில், சிவகார்த்திகேயன் சினிமாவில் வளர அவரின் படங்களுக்கு இமான் இசையமைத்த பாடல்களும் முக்கிய காரணம்.

மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீம துரை ஆகிய படங்களில் இமானின் இசையில் அதகளமாக இருக்கும். வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் ஆகிய படங்களின் வெற்றிதான் சிவகார்த்திகேயனை முன்னணி நடிகர்களில் ஒருவராக மாற்றியது.

இதையும் படிங்க: ஹேராம் படத்தில் நடந்ததும் மிகப்பெரிய மியூசிக்கல் சிலபஸ்… கமலின் வாழ்க்கையையே மாத்திய இசைஞானி..!

இமானும், சிவகார்த்திகேயனும் உடன் பிறவாத அண்ணன், தம்பியாகவே சினிமாவில் வலம் வந்தனர். இருவரின் குடும்பங்களும் அடிக்கடி சந்திப்பது என நெருக்கமாகவே இருந்தனர். சில மாதங்களுக்கு முன்பு இமான் தனது மனைவி மோனிகாவை விவாகரத்து செய்தார். அதன்பின் 2வது திருமணமும் செய்து கொண்டார்.

இமானின் விவகாரத்திற்கு சிவகார்த்திகேயனே காரணம் என அரசல், புரசலாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில்தான் இமானே ஒரு பேட்டியில் ‘சிவகார்த்திகேயன் எனக்கு செய்தது மன்னிக்க முடியாத துரோகம், இந்த ஜென்மத்தில் அவரின் படங்களுக்கு இசையமைக்க மாட்டேன். என் குழந்தைகள் வளர்ந்து வந்து என்னிடம் கேட்டால் உண்மையை சொல்வேன்’ என சொல்லி அதிரவைத்தார்.

இதையும் படிங்க: ஒட்டுமொத்த பிக்பாஸ் வீட்டையும் காலி பண்ண நினைக்கும் பிரதீப்! இறங்கி வேலையை காட்டும் சம்பவம்

இதையடுத்து, இமானை தொடர்பு கொண்ட சிவகார்த்திகேயன் அந்த வீடியோவை நீக்க சொன்னதாகவும், ஊடகங்களில் இதுபற்றி பேசவேண்டாம் என கோரிக்கை வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. அவர் மறுக்கவே, இணைய கூலிப்படைகளை வைத்து அந்த வீடியோ டிரெண்டிங் ஆகாமல் பார்த்துக்கொண்டதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் விவகாரம் பற்றி இமானிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு ‘இந்த விவகாரத்தில் நான் முற்றுப்புள்ளி வைக்க ஒன்றுமில்லை. இறைவன் இருக்கிறான்.. அவன் முற்றுப்புள்ளி வைப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ என பதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: என்னடா யாத்திசை படத்தை எடுத்து வச்சிருக்கீங்க!.. தங்கலான் டீசர் எப்படி இருக்கு?.. சியான் தப்பிப்பாரா?..

Next Story