Connect with us

Cinema History

ஹேராம் படத்தில் நடந்ததும் மிகப்பெரிய மியூசிக்கல் சிலபஸ்… கமலின் வாழ்க்கையையே மாத்திய இசைஞானி..!

Hey Ram: கமலின் படங்களை எடுத்துக்கொண்டால் அது பலருக்கு ஆச்சரியத்தினை தரும் என்பதில் சந்தேகமே இல்லை. அப்படி ஒரு படைப்பாக இருந்தது தான் ஹே ராம். ஆனால் அந்த படத்தில் நடந்த மிகப்பெரிய பிரச்னையால் கமலே திணறி நின்று இருக்கிறார். ஆனால் நடந்தது தான் ட்விஸ்ட்.

தன்னுடைய ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜாவை விட்டு அறிமுக இசையமைப்பாளரை வைத்து ஹே ராம் படத்தின் இசையை ரெடி செய்தார் கமல்ஹாசன். கடைசியில் ஒரிஜினல் மிக்ஸிங்காக அவரிடம் இசையை கேட்க ஒரு கோடி உடனே கேட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: விஜய் , அஜித்தை இனிமே அப்படி பாக்கவே முடியாது! தற்கொலைக்குச் சமம் – பகீர் கிளப்பிய பிரபலம்

இதனால் கமலே திணறி போய் நின்று இருக்கிறார். இது சரியாகாது. ராஜா தான் ஒரே வழி என அவரிடமே போய் விட்டாராம். அவரை பார்த்த ராஜா, என்ன ஆச்சு எனக் கேட்க, தப்பு பண்ணிவிட்டதாக கூறி நடந்ததை சொன்னாராம். பாட்டின் காட்சிகள் எல்லாம் ஷூட் பண்ணி விட்டதையும் சொல்லி இருக்கிறார்.

அதையெல்லாம் மீண்டும் ஷூட் பண்ண எவ்வளவு செலவு ஆகும் என்றாராம். நீங்க மியூசிக் முடித்து கொடுத்தால் அதை வைத்து எவ்வளவு கம்மியாக செய்ய முடியுமோ பார்த்துக்கிறேன் என்றாராம். உடனே இளையராஜா எனக்கு என்ன கொடுப்பீர்கள் என்கிறார்.

இதையும் படிங்க: ஒட்டுமொத்த பிக்பாஸ் வீட்டையும் காலி பண்ண நினைக்கும் பிரதீப்! இறங்கி வேலையை காட்டும் சம்பவம்

கமல் தண்டனையா சரி சொல்லுங்க. என்ன வேணும் எனக் கேட்கிறார். மீண்டும் பாட்டை ஷூட் பண்ண உங்களுக்கு ஆகும் அந்த செலவை எனக்கு கொடுங்க. நான் வேறு ஒரு ஐடியா சொல்கிறேன். ஏற்கனவே எடுத்த காட்சிகளை வைத்து பாடலை ட்யூன் போட்டு தருகிறேன் என்பது தான் அது.

இது கமலுக்கே சரியாக வருமா என சந்தேகத்தினை கொடுத்து இருக்கிறது. வேணாமே எனக் கமல் இழுக்க அப்போ என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா என ஷாக் கொடுத்து இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் அவர் போக்கிலேயே ஓகேயும் சொல்லிவிட்டார். இதையடுத்து சிறிது நாட்களில் கமலுக்கு அந்த ட்யூன்கள் காட்டப்பட்டு இருக்கிறது. அதுவும் பழைய காட்சிகளில் ராஜாவின் ட்யூனுடன் கேட்கவே அத்தனை அலாதியாக இருந்ததாம். ஒரு இடத்தில் கூட பிறழாமல் அச்சு அசலாக பாட்டுக்கும், காட்சிக்கும் அத்தனை மேட்ச் ஆனதாம். ராஜானா ராஜா தான்.

google news
Continue Reading

More in Cinema History

To Top