‘அயலான்’ திரைப்படத்தில் இந்த டாப் நடிகரும் இருக்கிறாரா? தயாரிப்பு நிறுவனம் கொடுத்த திடீர் ஷாக்

by Rohini |
siva
X

siva

Ayalan Movie: தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் ஒரு முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டிருக்கிறார். சின்னத்திரையில் இருந்து வந்து பெரிய திரையில் இப்படி ஒரு வளர்ச்சியை அடைந்திருக்கிறார் என்றால் அதற்கு முழு காரணம் அவருடைய கடின உழைப்பும் முயற்சியும்தான்.

ஆங்கராக தன் கெரியரை ஆரம்பித்த சிவகார்த்திகேயன் மூணு என்ற திரைப்படத்தில் தனுஷுக்கு நண்பராக நடித்திருப்பார். மெரினா படத்தின் மூலம்தான் ஹீரோவாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற நகைச்சுவை கலந்த படங்களில் நடித்து மக்களின் அபிமானங்களை பெற்றார்.

இதையும் படிங்க: சம்பவம் லோடிங்! அடிபட்ட பாம்பு சும்மா விடுமா? வெளியான ‘ரஜினி 171’ படத்தின்புதிய அப்டேட்

இன்று ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக அறியப்படுகிறார். அதுமட்டுமில்லாமல் கதைக்கு ஏற்ற வகையில் வித்தியாசமான கெட்டப்களையும் போட்டு மக்களை ரசிக்க வைத்து வருகிறார். இந்த நிலையில் இவரின் நடிப்பில் திரைக்கு வெளிவர காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் அயலான்.

வேற்றுக்கிரகவாசிகள் சம்பந்தப்பட்ட கதையாகவும் இது அமைய இருக்கிறது. ஒரு ஏலியன் திடீரென பூமியில் இறங்க அதன் பிறகு என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகிறது? சிவகார்த்திகேயன் அதை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது தான் கதை.

இதையும் படிங்க: ரஜினி, கமல், அமிதாப் இணைந்து நடித்த ஒரே படம்!.. அட அது அந்த படத்தோட ரீமேக்!…

இந்தப் படத்தை ரவிக்குமார் இயக்க ஆரி.டி.ராஜா படத்தை தயாரிக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான்தான் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில் அயலான் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

அதில் தயாரிப்பாளர் நடிகர் சித்தார்த்துடன் இருக்கிற மாதிரியான புகைப்படத்தை வெளியிட்டு சித்தார்த்துக்கும் நன்றி தெரிவித்திருந்தார். ஏனெனில் சித்தார்த்துக்கும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய பங்கு இருக்கிறதாம்.

இதையும் படிங்க: என்னது பிக்பாஸ் மாயா கமலுக்கு உறவினரா? இதுனாலதான் அம்மணி எஸ்கேப் ஆகிட்டே இருக்காரா?

என்னவெனில் அயலான் திரைப்படத்தில் வரும் ஏலியனுக்கு வாய்ஸ் கொடுத்ததே சித்தார்த்தானாம். அதனால் இந்த நன்றியை தெரிவித்து பகிர்ந்திருக்கிறார்.

Next Story