சினிமா வரலாறில் இதுவரை நடக்காத சம்பவம்! கவின் மீது விழுந்த கரும்புள்ளி.. இன்னும் என்னெல்லாம் நடக்க போதோ
Actor Kavin: தமிழ் சினிமாவின் ஒரு வளரும் இளம் தலைமுறை நடிகராக கவின் இருந்து வருகிறார். ஹேண்ட்ஸம்மான ஹீரோ, சார்மிங்கான ஹீரோ என்றெல்லாம் ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர். சினிமாவில் இப்பொழுதுதான் அவரின் எண்ட்ரி என்றாலும் அவர் தேர்ந்தெடுத்து நடித்த கதைகள் இரண்டும் மிகவும் ஆச்சரியப்பட வைத்தன. லிஃப்ட் மற்றும் டாடா போன்ற படங்களில் அவரின் நடிப்பு மிகவும் பாராட்டை பெற்றது.
அதுவும் டாடா படத்தில் ஒரு சின்ன குழந்தைக்கு அப்பா என்று யாருமே அவ்வளவு எளிதாக வந்து நடிக்க மாட்டார்கள். ஆனாலும் கவின் தைரியமாக வந்து நடித்துக் கொடுத்தார். அதில் வெற்றியும் கண்டார். இந்த இரண்டு படங்கள் அபார வெற்றிப் பெற்றது என்றாலும் அதன் காரணமாக கவினின் நடைமுறைகளில் ஒரு சில மாற்றங்கள் நடக்கத்தான் செய்தது.
இதையும் படிங்க: ஜெய்சங்கரின் ஆசையை நிறைவேற்றிய மகன்! அனைவரின் கவனத்தையும் ஈர்த்த விஜய்சங்கர்
இந்த இரண்டு படங்களின் வெற்றி அடுத்ததாக அவர் நடிக்கும் படத்திற்கு கோடிகளில் சம்பளம் வாங்க அவர் மனம் ஏங்கியது. அதனால் ரசிகர்கள் கவினை கண்டபடி வசைபாடி வந்தார்கள். நடித்தது இரண்டு படம்தான். அதற்குள் கோடிகளில் சம்பளமா? என்று பல விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த நிலையில் கவின் மீது மற்றொரு புகார் ஒன்று வந்துள்ளது.
கவின் இப்பொழுது எங்கே போனாலும் ஜிம் பாய்ஸை அழைத்துக் கொண்டுதான் போகிறாராம். ஒரு படத்தின் படப்பிடிப்பிற்குள் ரசிகர் ஒருவர் வந்து செல்ஃபி எடுக்க முற்பட கடுப்பான கவின் அந்த ஜிம் பாய்ஸை அழைத்து கடுமையாக சாடியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அனைவரும் வணங்கும் தெய்வமாக இருப்பவர்கள் படத்தில் ஃபைட் மாஸ்டர்ஸ்தான்.
இதையும் படிங்க: விஜய்க்கு வாழ்க்கை கொடுத்து காணாம போயிட்டாரு! இயக்குனர் விக்ரமனின் வெற்றியும் தோல்விகளும்!..
ஏன் ரஜின் கூட ஃபைட் மாஸ்டர் காலில் தொட்டு வணங்கிவிட்டுத்தான் செல்வாராம். அப்பேற்பட்ட மரியாதைக்குரிய ஃபைட் மாஸ்டரிடம் சண்டைக்கு நின்றாராம் . தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை ஃபைட் மாஸ்டரிடம் யாரும் சண்டை போட்டதே இல்லையாம். ஆனால் கவின் இப்படி மல்லுக்கு நின்றது அனைவரின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளது.