லியோவில் கமல்.. ‘கோட்’ல அஜித்தா? என்னப்பா சொல்றீங்க? உண்மையா?
Goat Movie: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் கோட். இந்த படம் வரும் ஐந்தாம் தேதி உலகெங்கிலும் ரிலீஸ் ஆக இருக்கின்றது. மொத்தம் 5000 ஸ்கிரீனில் படம் திரையிடப்படுவதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறி இருக்கிறார். தமிழ்நாட்டில் இதற்கான புக்கிங் ஆரம்பித்து அனைத்து திரையரங்கிலும் டிக்கெட் ஹவுஸ்ஃபுல்லாக போய்க்கொண்டிருக்கின்றது.
படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடிக்க இவர்களுடன் இணைந்து பிரபுதேவா பிரசாந்த் அஜ்மல் மோகன் யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜாஇசையமைத்திருக்கிறார்.
படத்தின் பாடல்கள் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க படத்தைப் பற்றி வெங்கட் பிரபு பிரேம்ஜி வைபவ் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் பலப்பல அப்டேட்டுகளை கொடுத்த வண்ணம் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: விசில் போடு பாடலை தியேட்டருக்கு வந்து பாருங்க… நான் பெட் கட்டுறேன்..! பிரேம்ஜி சவால்
ஏற்கனவே வெளியான தகவலின் படி படத்தில் தோனி சிவகார்த்திகேயன் திரிஷா ஆகியோர் கேமியோ ரோலில் இருப்பதாக பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவர்களையெல்லாம் தாண்டி இன்னும் சில கேமியா ரோல்கள் இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
இந்த நிலையில் நடிகர் வைபவ்விடம் தொகுப்பாளர் ஒருவர் மங்காத்தா கிளைமேக்ஸ்சில் விநாயக்காக வரும் அஜித் பாங்காங்கில் இருந்து தொலைபேசியில் அழைப்பது மாதிரி முடித்திருப்பார்.
இதையும் படிங்க: அந்த கெழட்டுப் பைய கூடலாம் முடியாது! மஞ்சுவாரியர் நோ சொன்னதுக்கான காரணம்
அதைப்போல கோட் திரைப்படத்திலும் விஜய் காந்தியாக பாங்காங்கில் தான் இருப்பார், ஒரு வேளை விஜயை காப்பாற்றுவது மாதிரி அஜித்திடம் இருந்து விஜய்க்கு கால் வருவது மாதிரியோ அல்லது அஜித்துக்கு விஜய்யிடம் இருந்து கால் வருவது மாதிரியோ இயக்குனர் ஏதாவது சம்பவம் செய்து இருக்கிறாரா என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த வைபவ் அப்படியா? ஓரளவு நெருங்கிட்டீங்க. ஆனால் கிளைமாக்ஸில் அந்த மாதிரி ஒன்னு இருக்கிறது என கூறியிருக்கிறார். இதிலிருந்து கோட் படத்தின் கிளைமாக்ஸில் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏதாவது வரும் என்ற ஒரு நம்பிக்கையை வைபவ் ரசிகர்களிடையே தெரியப்படுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: எஸ்.பி.பி எட்டு மணி நேரம் கஷ்டப்பட்டு பாடிய ரஜினி பாட்டு!… அட அந்த படமா?!…