Categories: latest news

‘தசாவதாரம்’ சாதனையை முறியடித்த ‘இந்தியன் 2’ – கமலுக்கு எத்தனை கெட்டப் தெரியுமா?!..

Indian 2: இன்று மாலை இந்தியன் 2 படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. ஆனால்  காலையிலேயே பத்திரிக்கை நண்பர்களுக்கு இந்தியன் 2 படத்தின் டிரைலரை பட குழு போட்டு காண்பித்து அவர்களை பிரமிக்க வைத்திருக்கிறது. இதைப்பற்றி சில பத்திரிக்கையாளர்கள் கூறுகையில்  ‘இந்தியன் 2 படத்தின் சிங்கிள்ஸ் மற்றும் சில போஸ்டர்கள் வெளியாகி எதிர்பார்ப்பை குறைத்து இருந்தது. இந்தியன் படம் மாதிரி இந்தியன் 2 திரைப்படம் இருக்காது போல என்ற ஒரு எண்ணத்தை வரவழைத்திருந்தது.

ஆனால் இந்த படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுது அந்த எண்ணத்தை எல்லாம் தவிடு பொடியாக்கி உள்ளது. இந்த ட்ரெய்லர் அந்த அளவுக்கு மிகச் சிறப்பாக வந்திருக்கிறது ’என எனக் கூறியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு சங்கர் இந்தியன்2 படத்தை பெரிய அளவில் எடுத்திருக்கிறார் என்பது இந்த ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது என ட்ரைலரை பார்த்த பத்திரிக்கை நண்பர்கள் பல பேர் பாராட்டி வருகிறார்கள்.

இதையும் படிங்க: ‘மகாராஜா’ படத்தால் இம்பிரஸ் ஆன சிவகார்த்திகேயன்! பட இயக்குனருக்கு காத்திருந்த அதிர்ச்சி

இதற்கு முன் கமல்  ‘எல்லாம் இன்பமயம்’ படத்தில் தான் அதிக கெட்டப் போட்டு நடித்தராம். அதன் பிறகு தசாவதாரம் படத்தில் 10 வேடத்தில் நடித்திருப்பார். இரண்டு படங்களையும் ஓவர் டேக் செய்து இந்தியன் 2 படத்தில் மொத்தம் 12 கெட்டப்பில் வருகிறாராம் கமல் .அதுவும் இந்தியன் 2 படத்தில் 7 கெட்டப் மற்றும் இந்தியன்  3  படத்தில் 5 கெட்டப் என வித விதமான கெட்டப்புகளில் வந்து அசத்தியிருக்கிறாராம் கமல்.

கெட்டப் என்று சொன்னாலே அது கமல் என கோலிவுட்டில் அவருக்கு என ஒரு தனி அடையாளம் இருக்கிறது. அவர் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு வித்தியாசமான கெட்டப்புடன் தான் வந்து நடித்திருக்கிறார். அதே மாதிரி இந்தியன் 2 படத்தில் இத்தனை கெட்டப்புகளில் கமல் வருவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. டிரெய்லரை பார்த்த பிறகு தான் அவர்களுக்கே ஆச்சரியமாக இருந்ததாம். ட்ரைலரே இப்படி என்றால் மெயின் பிக்சர் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: இதுக்கு முன்னாடி வந்து என்ன செஞ்சாங்க? விஜய் அரசியலில் இருக்கும் பவரே வேற.. பொங்கிய ஷியாம்

Rohini

Recent Posts

எம்ஜிஆருடன் நேருக்கு நேராக மோதிய பானுமதி… அடுத்து நடந்த தரமான சம்பவம்..!

தமிழ்த்திரை உலகில் புரட்சித்தலைவர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவரது படங்களின் வசனங்கள், பாடல்களில் இதைக் கண்கூடாகக் காணலாம்.…

21 minutes ago

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

10 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

11 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

18 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

19 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

20 hours ago