Cinema History
காக்கானு சொல்லி இத்தன நாளா ஏமாத்திருக்காங்க! பராசக்தி படத்தின் ‘கா..கா..கா’ பாடலில் இருக்கும் ட்விஸ்ட்…
Parasakthi Movie: சிவாஜி முதன் முதலாக நாயகனாக அறிமுகமான படம் பராசக்தி . 70 ஆண்டுகளை நிறைவு செய்த இந்த பராசக்தி திரைப்படம் திராவிட இயக்கத்தில் எப்பேற்பட்ட திருப்பு முனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
கலைஞர் மு.கருணாநிதி வசனத்தில் சிவாஜி நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் அந்த காலகட்டத்தில் தமிழ் நாட்டின் அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. படம் வெளியான அந்த காலகட்டத்தில் பராசக்தி திரைப்படத்திற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதையும் படிங்க: இது ஹிட் அடிக்காது!. விஜய் ரிஜெக்ட் பண்ணிய கதை!. ஆர்வமா நடித்து பல்பு வாங்கிய சூர்யா…
மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த பராசக்தி திரைப்படம் சமூகத்திலும் சரி அரசியலிலும் சரி பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. மூட நம்பிக்கைகள் எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை தெளிவாக இந்தப் படம் உணர்த்தியிருந்தது.
பராசக்தி படத்தில் கதை மட்டுமில்லாமல் அதில் அமைந்த பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியது. அதிலும் குறிப்பாக கா கா கா என்ற பாடல் எப்பேற்பட்ட கருத்துக்களை உள்ளடக்கிய பாடலாக அமைந்தது. தெருவோரத்தில் உட்கார்ந்து கொண்டு அங்கு திரியும் காக்கைகளுக்கு உணவை போடும் மாதிரியான காட்சிகளில் சிவாஜியின் நடிப்பு மெய்சிலிர்க்க வைத்தது.
இதையும் படிங்க: அரை டவுசர்ல சும்மா கும்முன்னு இருக்க!.. இளசுகளை மயக்கும் பிக்பாஸ் ரவீனா..
இந்த நிலையில் அந்த பாடலில் வந்த பறவைகள் உண்மையிலேயே காக்கைகளே இல்லையாம். அந்த நேரத்தில் ஒட்டுமொத்த காக்கைகளையும் ஒன்றாக ஒரே இடத்தில் வைத்து படமாக்கமுடியவில்லையாம். எல்லாம் பறந்து கொண்டே இருந்ததாம்.
அதனால் ஒரு 10 புறாக்களை பிடித்து அவைகளுக்கு கருப்பு சாயம் அடித்து காக்காவாக காட்டியிருக்கிறார்கள். இந்த செய்தியை பஞ்சு அருணாச்சலம் ஒரு பிரபல நாளிதழில் பேட்டியாக கொடுத்திருக்கிறாராம்.
இதையும் படிங்க: ஷூட்டிங்கில் விஜயை பார்த்து அப்படியே ஷாக் ஆயிட்டேன்!.. பிரபல நடிகர் சொன்ன சீக்ரெட்!..