ஆமா அவன்லாம் ஒரு ஆளு! கலைஞர் 100 விழாவில் அசிங்கப்பட்ட வடிவேலு!..

vadi
Actor Vadivelu: தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் இவர் இல்லாத படங்களே இல்லை என்ற அளவுக்கு கொடிகட்டி பறந்தவர் நடிகர் வடிவேலு. ஆனால் அந்த காலகட்டத்தில் இருந்த மவுசு தற்போது குறைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். சமீபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுமே சேர்ந்து கொண்டாடியது. ஆனால் ரஜினி, கமல் இவர்களைத் தவிர சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நடிகர்கள், நடிகைகள் யாரும் வராதது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதில் வடிவேலுவும் கலந்து கொண்டார். ஆனால் வடிவேலு அந்த விழாவில் கைப்புள்ளையாக மாறிய கதை யாருக்காவது தெரியுமா? முதலமைச்சர் பேசி முடித்ததும் கிளம்ப அவரை அடுத்து ரஜினி , கமல் ஆகிய இருவரும் அடுத்தடுத்து கிளம்பிவிட்டார்களாம்.
இதையும் படிங்க: மண்வாசனை படம் பார்த்து கமல்ஹாசன் செய்த வேலை!.. நெகிழ்ந்து போன நடிகை!..
அதன் பிறகு வடிவேலு மேடையில் பேசிவிட்டு கிளம்ப அவருக்காக பேட்டரி கார் தயார் நிலையில் இருந்ததாம். ஆனால் அவர் வருவதற்கு முன் டிரம்ஸ் சிவமணி தன் குடும்பத்தாருடன் அந்த பேட்டரி காரில் ஏறி உட்கார அங்கு இருந்தவர்கள் இது வடிவேலுவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கார் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதற்கு டிரம்ஸ் சிவமணி ஆமா, அவன்லாம் ஒரு ஆளு என்று சொல்லிவிட்டு அவர் ஏறி சென்று விட்டாராம். இந்த நிலையில் வடிவேலுவுக்கு இப்படி ஒரு நிலைமையா? என்றுதான் யோசிக்க வைத்தது. அதற்கான காரணத்தை பிரபல சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர் கூறினார்.
இதையும் படிங்க: மாட்டிக்கிட்ட பங்கு!… மனோஜை வசமாக சிக்க வைத்த முத்து.. கண்ணீருடன் நிற்கும் ரோகினி..
2011 க்கு முன்பு வரை வடிவேலுவை மிஞ்சிய நடிகர்கள் யாருமில்லை என்ற நிலைதான் இருந்தது. ஆனால் 2011 ஆம் ஆண்டு தேர்தல் அவரது வாழ்க்கையையே புரட்டி போட்டது. விஜயகாந்த், ஜெயலலிதா கூட்டணி உருவானது. கருணாநிதிக்கு ஆதரவாக விஜயகாந்தை எதிர்த்து வடிவேலு பேசிய பேச்சு இருக்கே. அதை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது.
அந்த தேர்தலில் ஜெயலலிதா வெற்றியடைய வடிவேலுவுக்கு படங்களே சுத்தமாக இல்லாமல் போய்விட்டது. அதற்கு காரணம் ஜெயலலிதாதான் என்று சொன்னார்கள். ஆனால் சிங்கப்பெண்ணாக இருந்த ஜெயலலிதா ரஜினி, கமலையே ஒரு பொருட்டாக நினைக்கமாட்டார். அப்படி இருக்கும் போது வடிவேலுவை அந்தளவுக்கு பெரிதாக எடுத்திருப்பாரா என்றுதான் நினைக்க தோன்றியது.
இதையும் படிங்க: ஓ இதுக்குப்பேருதான் ஆரஞ்ச் அலர்ட்டா!.. சோக்கா காட்டி ஜொள்ளு விட வைக்கிறியே யாஷிகா!..
அப்போ என்ன காரணம் என்றால் அவருடைய கேரக்டர்தான் அவரின் அழிவுக்கு காரணம் என்று அந்த பத்திரிக்கையாளர் கூறினார். யாரையும் மதிக்கிறது இல்லை. சரியான நேரத்திற்கு வருவதும் இல்லை. 3 நாள் கால்ஷீட் என்றால் வடிவேலுவால் 6 நாள் போய்விடுமாம். இதனாலேயேதான் சினிமா அவரை கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கி வைத்தது என அந்த பத்திரிக்கையாளர் கூறினார்.