ரஜினி நடித்த நெல்சன் இயக்கத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன் போன்ற பல நடிகர்கள் நடிக்கும் ஜெயிலர் திரைப்படம் நாளை உலகெங்கிலும் வெளியாக காத்துக் கொண்டிருக்கின்றது. இதன் முதல் கட்டமாக படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற முடிந்தது.
பட பிரமோஷனுக்காக அதில் நடித்திருக்கும் மிக முக்கிய பிரபலங்கள் அவ்வப்போது பேட்டியும் கொடுத்து வருகின்றனர். படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது ரஜினி பேசிய பேச்சு மிகவும் சர்ச்சையாகவும் வெடித்தது.
இதையும் படிங்க : 5 வயது கமல் நடிக்க எப்படி சான்ஸ் வாங்கினார் தெரியுமா?!.. பிஞ்சிலயே அவர் அப்படித்தானாம்!..
அனிருத் இசையில் படத்தில் உள்ள அத்தனை பாடல்களும் சூப்பர் சூப்பர் ஹிட் ஆகின. முக்கியமாக தமன்னா பாடிய காவலா சாங் 100 மில்லியனை கடந்து இதுவரை எந்த பாடலும் செய்ய சாதனையை படைத்திருக்கிறது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் கேரளாவில் இந்த படத்தின் மீதான வரவேற்பு எப்படி இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏனெனில் இதே பெயரில் கேரளாவிலும் நாளை ஜெயிலர் என்ற மற்றும் ஒரு திரைப்படம் வெளியாக உள்ளது. ஆனால் மலையாளத்தில் ரிலீஸ் ஆக உள்ள ஜெய்லர் திரைப்படத்தை விட ரஜினி நடிக்கும் ஜெய்லர் திரைப்படத்தில் தான் அதிக வாய்ப்புகள் உள்ளதாம்.
ஏனெனில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் மலையாள உலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்திருப்பதால் அவருக்காகவே கேரளாவில் ரஜினி படத்திற்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என தெரிகிறதாம். அதே சமயம் மலையாளத்தில் ரிலீஸ் ஆக உள்ள ஜெய்லர் திரைப்படத்திற்கு குறைந்த அளவே திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறதாம்.
இதையும் படிங்க : வாய்க்கால் தகராறை விட பெரிய பிரச்சனையாக இருக்கும் போலையே! இசைஞானி – ரஜினி கூட்டணி ஏன் மீண்டும் சேரல தெரியுமா?
இதனால் மலையாள ஜெய்லர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் தன்னுடைய படக்குழுவுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்களாம். அதனால் நாளை மறுதினம் தான் எந்த படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பது படம் ரிலீஸ் ஆன பிறகு தெரியும் என சித்ரா லட்சுமணன் கூறினார்.
ஏ ஆர்…
தமிழ் சினிமாவில்…
டோலிவுட்டின் இளம்…
இயக்குனர் லோகேஷ்…
ஐயப்ப பக்தர்களின்…