இங்க இருந்துகிட்டு கேரளாவில் ஆதிக்கம் செலுத்தும் விஜய்! பெருசா சம்பவம் இருக்கு

vijay
Vijay: விஜயின் நடிப்பில் வரும் 5 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் கோட். கோட் படத்தை வெங்கட் பிரபு இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
படத்தில் ஏராளமான நடிகர் பட்டாளமே நடித்திருக்கும் நிலையில் லியோ படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு இந்த படத்தின் மீது இல்லை. ஆனால் அது வேண்டாம் என படத்தின் தயாரிப்பு நிறுவனமே முடிவெடுத்திருந்தது.
இதையும் படிங்க:தோனி கேமியோலாம் இல்ல… ஆனா வேற ஒன்னு இருக்கு… வெளிப்படையா உடைச்சிட்டாரே வெங்கட் பிரபு…
அதனால் படத்தை பற்றி பெரிய அளவில் வெளியில் பேசவேண்டாம். அப்டேட்களையும் பெருசாக தரவேண்டாம் என்றே முடிவெடுத்திருந்தார்கள். ஆனால் அதையெல்லாவற்றையும் கடந்த இரண்டு தினங்களாக பிரேம்ஜியும் வைபவ்வும் கெடுத்து விட்டார்கள் என அர்ச்சனா கல்பாத்தியே கூறியிருக்கிறார்.
அந்தளவுக்கு போதும் என சொல்லுமளவுக்கு கோட் படத்தை பற்றி பெருசாக பேசி விட்டனர். இப்போது கோட் படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பும் வந்துவிட்டது. ஒரு ஹைப்பையே ஏற்படுத்திவிட்டனர். படத்தின் டிக்கெட் புக்கிங் ஆரம்பமாகி ஹவுஸ்ஃபுல்லாக போய்க் கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: பெத்த அப்பா தட்டி கேட்டாரா? வரலட்சுமி குறித்த கேள்விக்கு குஷ்பூ காரசாரமான பதில்
தமிழ் நாட்டில் அதிகாலை ஷோ என்பதே கிடையாது. கடைசியாக துணிவு படத்திற்குத்தான் அதிகாலை 1 மணி ஷோ போடப்பட்டிருந்தது. அதன் பிறகு காலை 9 மணி ஷோ என்றுதான் எல்லா படங்களுமே ரிலீஸ் ஆகிக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் கேரளாவில் அதிகாலை ஷோ 4 மணியில் கோட் திரைப்படம் வெளியாகப் போகிறதாம். அதற்காக fdfsல் கேரளாவில் மட்டும் கிட்டத்தட்ட 750 ஸ்கீரினில் கோட் திரைப்படம் வெளியாகிறதாம். உலகெங்கிலும் 5000 ஸ்கிரீனில் கோட் திரைப்படம் வெளியாக கேரளாவில் மட்டும்தான் அதிக ஷோக்களில் வெளியாகப் போகிறதாம்.
இதையும் படிங்க: பரபரப்பா போயிட்டு இருந்த கூலி ஷூட்டிங்கிற்கு சூனியம் வச்சிட்டானுங்களே.. பெரிய ஆளுதான்!
கேரளா என்றாலே விஜய்க்கு ஒரு தனி மாஸ் இருக்கத்தான் செய்யும். அதுவும் அரசியலில் நுழைந்த நேரத்தில் கோட் படத்தின் மீது கேரளாவில் இருக்கும் ரசிகர்களுக்கும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை கோட் திரைப்படம் பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.