கொம்புசீவி:
விஜயகாந்த் மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் நடிக்கும் திரைப்படம் கொம்புசீவி. இந்தப் படத்தை பொன்ராம் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தில் சரத்குமார் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.
படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் வரவேற்பில் விஜயகாந்த் படத்தின் புகைப்படமும் வைக்கப்பட்டது. விழாவிற்கு வந்த அனைத்து பிரபலங்களும் விஜயகாந்த் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திவிட்டு உள்ளே செல்வதை பார்க்க முடிந்தது.
எஸ்.ஏ.சி கருத்து:
மேலும் விஜயகாந்துடன் திரைத்துறையில் பயணித்தவர்களும் இந்த விழாவிற்கு வரவழைக்கப்பட்டனர். அதில் குறிப்பிடத்தக்கவர் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர். விஜயகாந்தை வைத்து கிட்டத்தட்ட 18 படங்களை இவர் இயக்கியுள்ளார். சண்முக பாண்டியனுக்கு இது நான்காவது படம்.
2012ல் ஆரம்பித்த அவருடைய சினிமா கெரியர் 13 வருடங்களாக இந்த சினிமாவில் இருக்கிறார். இத்தனை வருடங்களில் அவர் நான்கு படங்களில் நடித்துள்ளார். சகாப்தம், படைத்தலைவன், படைவீரன், கொம்புசீவி போன்ற படங்களாகும்.
மூன்று தலைமுறைகள்:
முதல் படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்தார். படைத்தலைவனுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். கொம்புசீவி படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இதுவே ஒரு புதுமையாகவும் பெருமையாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விழாவில் கலந்து கொண்டு பேசிய எஸ்.ஏ.சி, படத்தில் நடித்த ஹீரோவும் ஒரு இளைஞன், அவருடன் நடித்த சரத்குமாரும் ஒரு இளைஞன், படத்திற்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜாவும் ஒரு இளைஞன். ஆக புதிய வேகத்துடன் வந்திருக்கிறார்கள். ஒரு சரித்திரம் இருக்கிறது. அது உலகத்துக்கே உண்டான சரித்திரம்.
மக்கள் விரும்பும் மாற்றம்:
மாற்றம் மட்டும் மாறாதது. அது எல்லா துறையிலும் உண்டானது, சமூகத்திலும் சரி, அரசியலிலும் சரி, திரையுலகத்திலும் சரி. இந்த மாற்றங்களை யாராலும் மாற்ற முடியாது. திரையுலகத்தை எடுத்துக் கொண்டால் எம்கே பாகவதர் அதன் பிறகு எம்ஜிஆர் – சிவாஜி, இவர்களை அடுத்து ரஜினி – கமல், இவர்களை அடுத்து இன்றைய சூப்பர் ஸ்டார்கள் என மாறி கொண்டே வந்தது.

அது காலத்தின் கட்டாயம். ஆகவே இந்த மாற்றத்திற்கு உரிய இளைஞர்கள் வெற்றிபெற வேண்டும். ஏனென்றால் இந்த இளைஞர்களும் சரி, மக்களும் சரி, ஒரு மாற்றத்தை விரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாற்றம் இந்த திரைப்படத்திலும் ஏற்பட வேண்டும் என வேண்டுகிறேன் என எஸ்.ஏ.சி பேசியுள்ளார்.
