சிவாஜி கேரக்டரில் எஸ்.பி.பி.யா? நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டாரே.. என்ன படம் தெரியுமா

Sivaji SPB: சிவாஜியின் நடிப்பில் சக்க போடு போட்ட ஒரு படத்தில் சிவாஜிக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தவர் எஸ்.பி.பி என்ற ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பல கதாபாத்திரங்களை ஏற்று திறம்பட நடிப்பதில் தலை சிறந்தவர் சிவாஜி கணேசன்.

அவரை வைத்து பாரதிராஜா இயக்கிய திரைப்படம்தான் முதல் மரியாதை. இந்தப் படத்தில் 50 வயதை கடந்த கதாபாத்திரத்தில் ஊரில் மதிக்கக் கூடிய ஒரு கேரக்டரில் சிவாஜி நடித்திருப்பார். கதைப்படி மனைவியின் ஆளுமையை தாங்கிக் கொள்ள முடியாமல் பிடிக்காமல் அந்த மனைவியுடன் வாழும் கதாபாத்திரத்தில் சிவாஜி நடித்திருப்பார். அப்போது அந்த ஊருக்கு படகோட்டியாக வரும் ஒரு இளவயது நங்கை கதாபாத்திரத்தில் ராதா நடிக்க சிவாஜிக்கும் ராதாவுக்கும் இடையே காதல் மலர்கிறது.

இதையும் படிங்க: குமரிமுத்துவை கண்ணீர் விடச் செய்த சின்னக் கலைவாணர் விவேக்… அப்படி என்னதான் நடந்தது?..

இது அந்த ஊரில் அரசல் புரசலாக தெரிய சிவாஜியின் மனைவியான வடிவுக்கரசிக்கு தெரியவருகிறது. தெரிந்ததில் இருந்தே சிவாஜியை ஒரு வழி பண்ணிவிடுகிறார். வார்த்தைகளால் கொல்கிறார். இப்படியே கதை போக ஒரு கட்டத்தில் ராதா கொலை செய்து ஜெயிலுக்கு செல்ல ராதா வாழ்ந்த வீட்டிலேயே சிவாஜியும் தங்கி ராதா விடுதலை ஆகும் வரை தன் உயிரை கையில் பிடித்திருக்கிறார்.

விடுதலை ஆகி ராதா வெளியே வர சிவாஜியை வந்து பார்க்கிறார். ராதாவை பார்த்ததும் சிவாஜி சிரித்துக் கொண்டே ராதாவின் கையை பிடித்த படியே இறந்து விட ராதாவும் அவர் மேலே படுத்தபடி இறக்கிறாள். இப்படித்தான் கதை முடிவடைகிறது. ஆரம்பத்தில் ராதாவுக்கு ஜோடி சிவாஜியா என திரைப்பிரபலங்கள் அதிர்ச்சியடைய துணிச்சலாக இறங்கினார் பாரதிராஜா. வெற்றியும் பெற்றார்.

இதையும் படிங்க: கமல்ஹாசன் எங்களை மோசம் பண்ணிட்டாரு!.. இவ்ளோ பெரிய லாஸ் ஆகிடுச்சு!.. அழுது புலம்பும் பிரபல இயக்குநர்!

இந்த நிலையில்தான் சிவாஜிக்கு பதிலாக முதலில் எஸ்.பி.பியைத்தான் நடிக்க வைக்க இருந்தாராம் பாரதிராஜா. அந்த நேரத்தில் எஸ்.பி.பி பயங்கர பிஸியாக பாடுவதில் கவனம் செலுத்த அவரால் நடிக்க முடியாமல் போனதாக சித்ரா லட்சுமணன் கூறினார். மேலும் இந்தப் படத்தில் எஸ்.பி.பி பாடவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story