Connect with us

Cinema News

கமல்ஹாசன் எங்களை மோசம் பண்ணிட்டாரு!.. இவ்ளோ பெரிய லாஸ் ஆகிடுச்சு!.. அழுது புலம்பும் பிரபல இயக்குநர்!

கமல்ஹாசன் நடித்து வெளியான உத்தம வில்லன் திரைப்படம் எங்கள் நிறுவனத்துக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திய படமாக மாறியது என இயக்குனரும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளருமான லிங்குசாமி சமீபத்தில் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகநாயகன் என தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசன் படம்தான் உத்தம வில்லன். 2015-ம் ஆண்டு வெளியான அந்த படத்தை கமல்ஹாசனின் நண்பரும் நடிகர் மானம் ரமேஷ் அரவிந்த் இயக்கி இருந்தார்.

இதையும் படிங்க: கல்யாணம் ஆகப்போற ஜோரு!.. வருங்கால கணவருடன் ரொமாண்டிக் பர்த்டே கொண்டாட்டம்.. அதிதி செம ஹேப்பி!..

விஸ்வரூபம் படத்திற்கு பிறகு வெளியான உத்தம வில்லன் திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவரவில்லை. கமல்ஹாசன் தனது மொத்த நடிப்பையும் காட்டுகிறேன் என தியேட்டருக்கு சென்ற ரசிகர்களை தலைவலியுடன் திருப்பி அனுப்பியது தான் மிச்சம். அந்த அளவுக்கு டார்ச்சர் செய்து விட்டார். கமல்ஹாசனுடன் இணையும் போது தேவர் மகன் மாதிரியான படத்தை தான் ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என விரும்பினோம். ஆனால் அவர்தான் ஒற்றைக்காலில் நின்று கொண்டு இந்தப் படத்தை பண்ணலாம். இது நிச்சயம் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும் என்றார்.

ஒவ்வொரு முறை கமல்ஹாசனை சந்திக்கும் போதும் அவர் சொன்ன கதையை மாற்றிக் கொண்டே இருப்பார். கடைசியாக உத்தம வில்லன் படத்தை இயக்கி முடித்த நிலையில் அந்தப் படத்தைப் பார்த்தேன் அதில் எனக்கு ஏகப்பட்ட குறைகள் தென்பட்டது. அதையெல்லாம் ஒரு லிஸ்ட் போட்டு கமல் சாரிடம் சொன்னோம். அவரும் அதை எல்லாம் மாற்று விடுகிறேன் என்றார்.

இதையும் படிங்க: இதுக்கு கீழே எதுவும் போடாமலே இருக்கலாம்!.. லெக் ஷோ காட்டும் சமந்தா!.. கவுந்து போன பாய்ஸ்!..

ஆனால் அடுத்த நாள் குஷ்பூ உள்ளிட்ட பிரபலங்களுக்கு படத்தைப் போட்டு காட்டியவர், எல்லாரும் நல்லா இருக்குன்னு சொல்றாங்க படத்தை இப்படியே வெளியிடுவோம் ஹிட் அடிக்கும் என்றார். ஆனால் நான் சொன்னது போலவே படம் படுதோல்வியை சந்தித்தது. அந்த படத்தால் எனக்கு ஒரு ரூபாய் கூட லாபம் இல்லை பெரிய நஷ்டம் தான் ஏற்பட்டது.

அந்த நஷ்டத்தை சரிகட்ட இன்னொரு படத்தை 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுத்துத் தருவதாக கமல்ஹாசன் வாக்குறுதி கொடுத்தார். பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் அவரிடம் பொறுமையாகவே கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவரும் நிச்சயம் படம் பண்ணித் தருவதாக கூறியுள்ளார் என லிங்குசாமி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அறம் பட இயக்குநரின் அடுத்த படைப்பு!.. மனுசி டிரெய்லரில் மிரட்டும் ஆண்ட்ரியா!.. வசனமெல்லாம் ஃபயரு!..

google news
Continue Reading

More in Cinema News

To Top