விஜய் நடிக்க வேண்டிய படம்.. சிம்புவை வைத்து களமிறங்கும் இயக்குனர்! இது புது அப்டேட்டால இருக்கு

Published on: April 27, 2024
simbuu
---Advertisement---

Actor Vijay: சினிமாவைப் பொறுத்த வரைக்கும் ஒரு நடிகருக்காக எழுதப்பட்ட கதையில் வேறொரு நடிகர் நடிப்பது பெரும்பாலும் வழக்கமாகிவிட்டது. ஒரு நடிகரை மனதில் வைத்து கிரிப்ட் எழுதும் இயக்குநர்கள் ஏராளம். அந்த வகையில் சூழ்நிலை காரணமாக அந்த நடிகர் நடிக்காமல் கூட போகலாம். வேறு வழி இன்றி வேறொரு நடிகரை தேடும் நிலைக்கு அந்த இயக்குனர்கள் தள்ளப்படுகின்றனர்.

அப்படி ஏராளமான படங்கள் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகியிருக்கின்றன. அல்லது பிளாப்பும் கொடுத்திருக்கின்றன. அந்த வகையில் விஜய்க்காக எழுதப்பட்ட ஸ்கிரிப்ட்டில் சிம்பு நடித்தால் எப்படி இருக்கும்? சீமான் பல காலம் முன்னரே விஜய்க்காக  ‘பகலவன்’ என்ற பெயரில் ஒரு ஸ்கிரிப்ட் எழுதி இருந்தார். அது மிகவும் பொலிட்டிக்கல் திரில்லர் நிறைந்த படமாகும்.

இதையும் படிங்க: விஜய் ஸ்டைலில் வெளியான கவினின் ஸ்டார் ட்ரைலர்… அடுத்த ஹிட் கன்பார்ம் தான் போல…

ஆனால் அந்த படத்தில் விஜய் நடிப்பதாக இல்லை. அதற்கு காரணம் என்ன என்பதை சீமான் ஒரு பழைய பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது எனக்கும் விஜய்க்கும்  எந்த பிரச்சினையும் இல்லை. எங்க இரண்டு பேருக்கும் அது செட்டாகாது. அதனால் அண்ணன் தம்பியாகவே நாங்கள் பிரிந்து விட்டோம். அதனால் பகலவன் படத்தை எடுத்தால் கண்டிப்பாக சிம்புவை வைத்து தான் எடுப்பேன் என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஆனால் அனைவரும் எதிர்பார்த்தது பகலவன் திரைப்படம் ஒரு பொலிட்டிக்கல் திரில்லர் படமாக அமைந்திருப்பதால் கண்டிப்பாக இது விஜயின் கடைசி படமாக இருக்கும் என்று தான் எதிர்பார்த்தார்கள். ஏனெனில் விஜய் கோட் திரைப்படத்திற்கு பிறகு எச் வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

இதையும் படிங்க: இப்படி தலைப்பு வச்சா படம் ஓடாது!.. விஜய்க்கு இப்படி ஒரு ராசி இருக்கு!.. பொங்கும் பிரபலம்…

அரசியலில் நுழைவதால் கண்டிப்பாக கடைசி படம் அரசியல் சம்பந்தப்பட்ட கதைக்களமாக இருந்தால் மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை உண்டாக்கும் என்று ரசிகர்களும் ஆர்வமாக காத்திருந்தார்கள். அதனால் ஒரு வேளை பகலவன் திரைப்படத்தின் கதையில் கூட விஜய் நடிக்கலாம் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் சீமானின் இந்த பேட்டி இப்போது வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த பகலவன் திரைப்படத்தை நான் எடுத்தால் கண்டிப்பாக அதில் சிம்புவைத்தான் நடிக்க வைப்பேன் என்று திட்டவட்டமாக அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் சீமான்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.