ஞானவேல்ராஜா சொல்வது அப்பட்டமான பொய்! சிவக்குமாரால ஒரு பிரயோஜனம் இல்ல - பருத்திவீரனில் நடந்தது இதுதான்
Paruthiveeran Movie: இப்போது கோலிவுட்டில் பூதாகரமாக கிளம்பியிருப்பது அமீர் மற்றும் ஞானவேல் ராஜாவிற்கு இடையே இருக்கும் பிரச்சினை பற்றித்தான். இதில் ஞானவேல் ராஜா மீது அமீர் புகாரும் கொடுத்திருக்கிறார். இன்னொரு பக்கம் அமீர் தயாரிப்பாளர்களிடம் கடன் நிறைய வாங்குவார் என குற்றம் சாட்டியிருக்கிறார்.
மேலும் 6 மாதங்களில் பருத்திவீரனை எடுத்துத் தருகிறேன் என கூறிவிட்டு இரண்டரை வருடங்களாக எடுத்தார் என்றும் அமீர் மீது ஞானவேல் ராஜா குற்றம் சாட்டினார். அதுமட்டுமில்லாமல் தன்னிடம் பெற்ற கடனுக்காகத்தான் பருத்திவீரனையே அமீர் எடுத்தார் என்றும் கார்த்தியை இவர்தான் அறிமுகம் செய்தார் என்று சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர் என்றும் ஞானவேல் ராஜா குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: கலைஞர் விழாவில் அஜித் அப்படி பேசுனதுக்கு இவர்தான் காரணமாம்… என்னதான் இருந்தாலும் வளர்த்தவராச்சே!…
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தயாரிப்பாளர் டி.ஆர்.ரமேஷ் சில விஷயங்களை பகிர்ந்தார். டி.ஆர்.ரமேஷ் அமீருக்கும் ஞானவேல் ராஜாவுக்கும் மிகவும் நெருக்கமானவர்தான். ஆரம்பத்தில் சூர்யா நடித்த ஸ்ரீ படத்திற்காக விளம்பரம் செய்ய வேண்டும் என டி,ஆர் . ரமேஷிடம் வந்து நின்றவர்தானாம் ஞானவேல் ராஜா.
ஆனால் ஞானவேல் ராஜா சிவக்குமார் குடும்பத்தாருக்கு உறவுக்காரர் இல்லையாம். ஒரே ஊர்க்காரர் என்பதால்தான் இவ்வளவு நெருக்கமாம். ஞானவேல் ராஜாவுக்கும் சினிமாவுக்கும் ஆரம்பத்தில் எந்த தொடர்பும் இல்லையாம். சூர்யாவின் மன்றத்தில் ஏதோ ஒரு பொறுப்பில் இருந்தாராம். அதன் பிறகுதான் அமீரின் ராம் படத்தை பார்த்துவிட்டு கார்த்திக்காக ஒரு படம் பண்ண வேண்டும் என அமீரிடம் வந்து நின்றாராம் ஞானவேல்ராஜா.
இதையும் படிங்க: பாரதிராஜாவை வச்சு ஒரு சின்னப் பொய் சொன்னேன்! இப்படி ஆகும்னு நினைக்கல – சுகன்யா சொன்ன சீக்ரெட்
ஆனால் அமீர் வாய்ப்பு கேட்டு நிற்கவில்லை என்று உறுதிபட கூறினார் டி.ஆர். ரமேஷ். அப்போது பருத்திவீரன் படத்திற்காக பணத்தை மதுரை அன்புவிடம் இருந்து ஞானவேல் ராஜாவுக்கு வாங்கிக் கொடுத்ததும் டி.ஆர்.ரமேஷ்தானாம்.அதிலிருந்துதான் 50 லட்சம் சம்பளத்தை அமீருக்கு கொடுத்திருக்கிறார் ஞானவேல் ராஜா.
ஆனால் அமீர் கடன் வாங்கவில்லை என்றும் அது அவருடைய சம்பளம் என்றும் டி,ஆர். ரமேஷ் கூறினார். இதில் தன் பையன் தானே என்று சிவக்குமார் பண உதவி செய்யலாம் அல்லவா? ஆனால் பத்து பைசா அங்கு இருந்து வராது. அப்படிப்பட்டவர் சிவக்குமார். சூர்யா நடித்த ஆரம்பகால படங்கள் தோல்வியைத்தான் சந்தித்தன. அப்போதாவது ஏதாவது தயாரிப்பாளர்களிடம் மகனுக்காக சிவக்குமார் பேசியிருக்கலாமே? ஆனால் செய்யமாட்டார் என்று டி.ஆர். ரமேஷ் கூறினார்.
இதையும் படிங்க: ஓவரா ஆசைபட்டு கடைசில பாலசந்தரிடம் பல்பு வாங்கிய கமல்… அட இப்படி ஒரு சம்பவம் கூட நடந்துருக்கா?…
மொத்தத்தில் ஞானவேல் ராஜா ஒரு பச்சோந்தி. அவர் உள்ளே வந்த பிறகுதான் அமீர், பாலா இருவரும் சூர்யா குடும்பத்தில் இருந்து பிரியக் காரணமாக இருந்தது என்றும் கலையை நேசிக்கிறவர் அமீர் என்றும் தன் சொந்த காசை போட்டு படம் எடுத்தவருக்கு பணத்தோட அருமை தெரியும் என்றும் டி.ஆர். ரமேஷ் கூறினார்.
மேலும் பருத்திவீரன் படத்தில் சரவணனை தவிற மற்ற எல்லாரும் புதிய ஆர்ட்டிஸ்ட். அதனால் அவர்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து சொல்லிக் கொடுத்து மெருகேற்றியவர் அமீர். அதுக்கே பல நாள்கள் ஆனது. கார்த்தி இந்தளவுக்கு இன்று நடிக்கிறார் என்றால் அதற்கு முழு காரணமே அமீர்தான். இப்படி இருக்கும் போது படத்தை எடுக்க நாள்கள் ஆகத்தானே செய்யும்? கார்த்தி ஒன்றும் ஆரம்பத்திலேயே நடிகர்திலகமாக இல்லை என்று டி.ஆர். ரமேஷ் கூறினார்.