ஏம்மா.. நான் தான் விஜய்! அடையாளம் தெரியாமல் சீமைல போய் பல்பு வாங்கிய தளபதி – fun பண்ண பாட்டி

Published on: December 30, 2023
vi
---Advertisement---

Actor Vijay: தமிழ் சினிமாவில் ஒரு உச்சம் பெற்ற நடிகராக விளங்குபவர் நடிகர் விஜய். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஐதராபாத்தில் நடந்துவருகின்றது.

இரண்டு தினங்களுக்கு  முன்புதான் ஐதராபாத்தில் இருந்து கேப்டன் மறைவுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்தார் விஜய். வந்ததே சரி என நேராக கேப்டனுக்கு  அஞ்சலி செலுத்த போன விஜய் கூட்டத்திற்கு நடுவே சிக்கி கேப்டன் ரசிகர்களிடம் வசமாக சிக்கிக் கொண்டார்.

இதையும் படிங்க: ஏம்மா.. நான் தான் விஜய்! அடையாளம் தெரியாமல் சீமைல போய் பல்பு வாங்கிய தளபதி – fun பண்ண பாட்டி

ஏற்கனவே விஜய் மீதுள்ள கோபத்தில் கேப்டன் ரசிகர்கள் வெளியே போ என்றும் துரோகி என்றும் நன்றிக்கெட்டவன் என்றும் வசை பாடிக் கொண்டே இருந்தனர். அதனால் வந்ததும் அஞ்சலி செலுத்தி விட்டு சென்று விட்டார் விஜய்,

இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி மக்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்குவதற்காக திருநெல்வேலி சென்ற விஜயை அங்கேயும் மக்கள் சூழ்ந்து கொண்டனர்.  நிலை தடுமாறி விஜய் கீழே விழ அருகில் இருந்த அதிகாரிகள் அவரை தாங்கிப் பிடித்து கொண்டனர்,

இதையும் படிங்க: வடிவேலு எல்லாம் ஒரு மனுஷனா… மதுரைக்காரனோட மானத்த வாங்காதப்பா… பயில்வான் பொளேர்..!

இந்த நிலையில் காய்கறிகள், மளிகை பொருள்கள், அரிசிகள் கொண்ட நிவாரண பொருள்களை வரிசையாக வழங்கிக் கொண்டிருந்த விஜயை அடையாளம் தெரியாத ஒரு பாட்டி விஜயை கடந்து விஜய் யார் என்பதை போல் தேடி சென்றார்.

அந்த பாட்டியை விஜய் தன் அருகில் அழைத்து நான் தான் விஜய் என்று சொல்லி அந்த நிவாரணப் பொருள்களை வழங்கினார். இந்த வீடியோதான் இப்போது  வைரலாகி வருகின்றது. நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோ மூலம் ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

இதையும் படிங்க: கேப்டனுக்கு வந்தது என்ன வியாதின்னு தெரியுமா? பிரபலம் சொல்லும் அதிர்ச்சி தகவல்…

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.youtube.com/shorts/EI11K5D3CTg

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.