Connect with us
V1v2

Cinema History

கேப்டனுக்கு வந்தது என்ன வியாதின்னு தெரியுமா? பிரபலம் சொல்லும் அதிர்ச்சி தகவல்…

விஜயகாந்த் படங்கள் எல்லாமே பெரும்பாலும் வெற்றி பெற்றவை தான். 80 மற்றும் 90களில் வெளியான இவரது படங்களை இப்போது பார்த்தாலும் சுவாரசியம் குறையாமல் இருக்கும். சினிமாவில் எந்த அளவு அநியாயங்களைக் கண்டால் பொங்கி வழிவாரோ, அதே போலத் தான் நிஜ வாழ்விலும் விஜயகாந்த் நடந்து கொண்டார்.

இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையே எதிர்த்தவர் தான் இந்த கேப்டன். அவரது மறைவு தமிழ்த்திரை உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலில் என்ன தான் வியாதி என பலரும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ள நிலையில், டாக்டர் காந்தாராஜ் ஒரு தகவலைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…

இதையும் படிங்க… சிவாஜி இறப்பில் நடிகர் சங்கம் செய்த விஷயம்..! விஜயகாந்த் இறப்பில் ஒரு ஈ, காக்காவை காணுமே..!

இதயத்தில் பைபாஸ் சர்ஜரி பண்ணறதுக்கு உடல் தகுதியாக இருக்க வேண்டும். அப்போது தான் பண்ண முடியும். இல்லாவிட்டால் உடம்பு தாங்காது. விஜயகாந்துக்கும், எம்ஜிஆருக்கு பண்ணது மாதிரியே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பண்ணிருக்காங்க. இந்த சிகிச்சையின் ஆயுள் 3 முதல் 8 வருஷம் தான்.

விஜயகாந்த்துக்கு கொரோனாங்கறது எல்லாம் கிடையாது. குடும்பம் சரியா பார்த்துக்கலன்னு எல்லாம் பேச்சு வந்தது. அதுக்காக கொரோனான்னு சொல்றது. நிமோனியாங்கற நோய் வந்து கொரோனாவோட பாதிப்பு. அதை வச்சிக்கிட்டு கொரோனா வந்துருக்குன்னு சொல்லக்கூடாது. அப்படி கொரோனா வந்துருந்தா எப்படி பாடியைத் தூக்க விடுவாங்க?

இதையும் படிங்க… அப்பவே அந்த வேலையைப் பற்றி அப்பட்டமாக சொன்ன தேங்காய் சீனிவாசன்… என்ன படத்தில் தெரியுமா?

குடும்பம் கவனிச்சதா இல்லையாங்கறது எல்லாம் எனக்குத் தெரியாது. ஒருவாரத்துக்கு முன்னாடி பொதுக்குழுவுல அழைச்சிட்டுப் போயி உட்கார வைக்கும்போதே அவர் சுயநினைவில் இல்லை. அப்பவே கோமா ஸ்டேஜ்ல தான் இருக்காருன்னு எனக்கு தெரிஞ்சது. கண்ணு எல்லாம் நல்லா பெரிசா ஆயிட்டு. வாய் திறந்து கிடக்கு. அதனால தான் முகக்கவசமும், கருப்பு கண்ணாடியும் போட்டுருந்தாங்க. அப்போ அங்கிருந்த தொண்டர்கள் எல்லாம் கண்ணீர் விட்டு அழுறதைப் பார்த்தேன்.

ரஜினிகாந்த்துக்கும் மனோரமாவுக்கும் கருத்து வேறுபாடு வந்தபோது நீ மக்களுக்கு என்ன செய்தாய் என்று மனோரமா கேட்டாராம். விஜயகாந்த் தம்பி எவ்வளவு செஞ்சிருக்கு தெரியுமான்னு பட்டியல் போட்டாராம். அப்ப தான் தெரிஞ்சிருக்கு. இவரு எந்த அளவுக்கு பண்ணிருக்காருன்னு… விஜயகாந்த் எவ்வளவு உதவிகளை மக்களுக்குச் செய்தாலும் அவர் விளம்பரப்படுத்தவே இல்லை.அங்க தான் அவரோட பெரிய மனுஷன் தன்மை தெரியுது.

மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபர் டாக்டர் காந்தாராஜ் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top