நடிகையை டான்ஸ் ஆட வைக்க திணறிய மாஸ்டர்! அஜித் கொடுத்த ஐடியா.. காமெடியாக முடிந்த படப்பிடிப்பு

Published on: May 7, 2024
ajith
---Advertisement---

Actor Ajith: அஜித்தின் படப்பிடிப்பில் நடிகைக்கு டான்ஸ் ஆட தெரியாமல் அந்த படத்தின் நடன இயக்குனர் பட்ட பாடு பற்றி படத்தின் இயக்குனரே பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகி வருகின்றது. சுந்தர் சி இயக்கத்தில் அஜித், மாளவிகா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் உன்னை தேடி.

காதல் மற்றும் செண்டிமெண்ட் கலந்த குடும்ப கதைகளத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சுந்தர் சியின் அரண்மனை 4 திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர் பல youtube சேனல்களுக்கு அந்த படத்தை பற்றியும் இவருடைய சினிமா அனுபவத்தை பற்றியும் சில தினங்களாக பேட்டியில் பகிர்ந்து வருகிறார்.

Also Read

இதையும் படிங்க: ஈஸ்வரிக்கிட்ட ஒருவழியா விஷயத்தினை உடைச்சிட்டாரே கோபி… இனியாவது கதைய மாத்துங்கப்பா…

இந்த நிலையில் தான் உன்னை தேடி திரைப்படத்தில் நடந்த ஒரு சுவாரசியமான தகவலையும் கூறி இருக்கிறார். உன்னை தேடி திரைப்படத்தில் அமைந்த ஒரு சூப்பர் ஹிட் பாடல்  ‘நீதானா நீதானா என் அன்பே நீ தானா’ என்ற பாடல். இந்த படத்தின் மூலமாகத்தான் மாளவிகா முதன்முதலில் சினிமாவில் அறிமுகமாகிறார். ஆனால் அவருக்கு டான்ஸ் ஆடவே தெரியாதாம்.

அந்தப் பாடலை பொருத்தவரைக்கும் பெரிய அளவில் டான்ஸும் இருக்காது. இருந்தாலும் அந்த நேரத்தில் அஜித்துக்கு முதுகில் பிரச்சனை இருந்ததாம். சுந்தர் சிக்கு தொண்டையில் பிரச்சனை இருந்ததாம். மாளவிகாவுக்கு ஆடவே தெரியாதாம். இப்படி மூன்று விதங்களில் பிரச்சனைகளுடன் நடந்த படப்பிடிப்பு தான் அந்தப் பாடல் காட்சி பதிவு. மாளவிகாவை ஆட வைக்க இந்த படத்தில் பணியாற்றிய நடன இயக்குனர் ரொம்பவே படாதபாடு பட்டு விட்டாராம்.

இதையும் படிங்க : காசுக்கு ஆசைப்பட்டு கோட்டை விட்ட கரண்!.. கடைசியா விக்ரம் நடிச்சு சூப்பர் ஹிட்டான படம் எது தெரியுமா?

அவரின் நிலைமையை புரிந்து கொண்ட அஜித் இதை நான் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறி அவர் ஒரு ஐடியாவை கொடுத்திருக்கிறார். அந்த பாடலை இப்போது நீங்கள் பார்க்கும் போது அஜித் இரண்டு கைகளையும் மாளவிகாவை நீட்டி அழைத்தவாறு நடித்திருப்பார். அது அஜித் கொடுத்த ஐடியாதானாம். நீதானா என்னும் சொல்லும் போது ஒரு கையை வா என்ற வகையில் அழைத்திருப்பார் அஜித். மற்றொரு நீதானா என்று வரும்போது மற்றொரு கையை வா என அழைத்திருப்பார்.

nithana
nithana

அப்படி அழைக்கும் போது மாளவிகா அஜித்தை நோக்கி வரவேண்டும். அன்பே நீ தானா என்று வரும்போது அஜித் இரண்டு கைகளையும் ஸ்டாப் செய்கிற மாதிரி ஆக்சன் கொடுத்திருப்பார். அப்படி பண்ணும் போது மாளவிகா நின்றுவிட வேண்டும். இதுதான் மாளவிகாவுக்காக அஜித் கொடுத்த ஐடியா. இது அந்த பாடலில் நன்கு வொர்க் அவுட் ஆகிவிட்டது என சுந்தர் சி கூறினார்.

இதையும் படிங்க: ஸ்டார் படத்துக்கு சிக்கலா மாறிய அரண்மனை 4!.. வார நாட்களிலும் வசூல் வேட்டை நடத்துதே!..