இந்தியன் 2 படத்தில் தரமான 5 சம்பவங்கள்... அதுல ஒண்ணுதான் அந்த புது டெக்னாலஜி..

by sankaran v |   ( Updated:2024-05-24 05:00:42  )
Indian 2
X

Indian 2

கமல், இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் ரொம்பவே தரமாகத் தயாராகி வரும் படம் இந்தியன் 2. இது போன்ற டெக்னாலஜி இந்தப் படத்தில் தான் முதன்முறையாகக் கையாளப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் 5 தரமான சம்பவங்களும் காத்திருக்கிறதாம். இதற்காகவே நாம் இந்தப் படத்தைக் கட்டாயமாகத் தியேட்டருக்குப் போய் பார்க்க வேண்டும். அது என்னென்ன என்று பார்ப்போமா...

அதுல நம்பர் ஒன் என்னன்னா டி ஏஜிங் டெக்னாலஜி. 2022ல் வெளியான விக்ரம் படத்தில் கூட இந்த டெக்னாலஜியைக் கொண்டு வர முயற்சித்தனர். ஆனால் அதற்கான செலவு அதிகம் என்பதால் கைவிட்டுவிட்டார்களாம். அதனால் முதல் முறையாக இந்தியன் 2ல் அந்தத் தரமான சம்பவம் வருகிறதாம். நெட்பிளிக்ஸ்சில் வெளியான 'தி ஐரிஷ்மேன்' படத்தில் தான் இந்த டிஏஜிங் டெக்னாலஜியை ராபர்ட் டீனியருக்குப் பொருத்திப் பார்த்தார்களாம்.

FS

FS

அந்தப் படமும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு இந்தியன் 2 பட்ஜெட் 400 கோடி. கமலின் 80 வெர்சனைக் காட்டுவதற்காக டிஏஜிங் டெக்னாலஜியை முதன் முதலாக பண்ணப் போகிற முதல் இந்தியத் திரைப்படமாக வரப் போகிறது. அதைப் பார்க்கும் போது நாம் மிரண்டு போய் விடுவோம்.
பாரா பாடலில் குதிரை வீரனாக வரும் கமல் 'டிஏஜிங்' முறைப்படிக் கொண்டு வரப்பட்ட காட்சி தான்.

அடுத்ததாக இந்தப் படத்தில் வரும் பைட் சீன். 5 ஸ்டண்ட் மாஸ்டர்கள். அந்தோணி, அனல் அரசு, பீட்டர் ஹெய்ன், அன்பறிவு, கிராண்ட் ஹ்யூலி என 5 பேருமே பெரிய அளவில் ஸ்டண்ட்கள் அமைத்துப் பிரபலமானவர்கள். 4 பைட் செம மாஸாக வந்துள்ளதாம். அதில் ஒரு பைட்டை கமல் பண்ணவில்லையாம். அது காஜல் அகர்வாலாகக் கூட இருக்கலாம்.

அவர் தான் இந்தப் படத்திற்காக மார்ஷல் ஆர்ட் டிரெய்னிங், ஜிம்முக்குப் போவது என நிறைய பயிற்சிகள் எடுத்து வந்தார். அதிலும் நீளமான சண்டைக்காட்சி ஒன்று தென்னாப்பிரிக்காவில் டிரெயினில் எடுத்தார்களாம். அது கிளைமாக்ஸ் அல்லது இன்டர்வெல் பிளாக்கில் வருமாம். இந்த பைட் சீன் கமலின் தரமான சம்பவமாம்.

'ப்ரீ இன்டிபென்டன்ட் எரா' என்ற அந்தக் காலகட்டத்தை அதாவது 1920களில் இருந்த இந்தியா எப்படி இருந்தது என அந்தக் காலகட்டத்துக்கே நம்மைக் கொண்டு செல்கிறார்கள். அந்தக் கால உடைகள், அப்போது இருந்த வாகனங்கள், கலாச்சாரம் அப்படியே கொண்டு வந்துள்ளார்கள்.

Indian 2

Indian 2

இந்தக் கதை சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், குரு சோமசுந்தரம், நெடுமுடி வேணு என ஒவ்வொரு கேரக்டர்களும் கதையை நகர்த்திக் கொண்டு போகிறதாம்.

இந்தப் படத்தில் அடுத்த தரமான சம்பவம் லொகேஷன். தைவான், ஜப்பான், தென்னாப்பிரிக்கா என நாலைந்து நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இந்தப் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதுவரை தென்னாப்பிரிக்காவில் உள்ள இடத்தை எந்தப் படத்திலும் காட்டவில்லையாம். இன்னொரு இடம் கிளாஸ் மாதிரியும் மேகங்கள் தரையில் இருப்பது போலவும் அப்படி ஒரு இடம் உள்ளது.

இது கிராபிக்ஸ், செட் இல்லை. இந்த இடம் பொலிவியா நாட்டில் அதுவும் மேற்கு பொலிவியாவில் சலால் டே வியூன் என்ற இடத்தில் தான் இப்படி ஒரு இடம் உள்ளது. முழுவதும் உப்பு. அதன் மேல் நீர் உள்ளதால் அப்படி ஒரு காட்சி நமக்குத் தெரிகிறது.

Next Story