7 ஆண்டுகளுக்குப் பிறகு ஷங்கர் படத்தின் ஆடியோ லாஞ்ச்… என்னென்ன ஸ்பெஷல்?

Published on: May 31, 2024
Indian 2
---Advertisement---

கமல், இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12ல் வெளியாகிறது. அதையொட்டி இன்று (1.6.2024) இந்தப் படத்தின் ஆடியோ லாஞ்ச் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் என்னென்ன சிறப்புகள் இடம்பெற உள்ளன என்று பார்ப்போம்.

கடைசியாக எந்திரன் படம் மலேசியா, 2.O படத்திற்கு துபாய்ல பண்ணினாங்க. தசாவதாரம் படத்துக்கு ஜாக்கிஷான், ஐ படத்துக்கு அர்னால்டை இயக்குனர் ஷங்கர் அழைத்து வந்தார். கமலும், ஷங்கரும் தக் லைஃப், கேம் சேஞ்சர் என அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருப்பதால் சென்னையிலேயே வைத்து விட்டார்கள்.

கமலும், ஷங்கரும் கஷ்டப்பட்டு எப்படி இந்தியன் 2 எடுத்தாங்க என்பதற்கான முன்னோட்டமாகவும் இந்த ஆடியோ லாஞ்ச் இருக்குமாம். இன்னொரு முக்கியமான விஷயம் ‘பாரா’ பாடலை மேடையிலேயே அனிருத் பாட உள்ளாராம்.

இந்தியன் முதல் பாகத்தின் வீடியோவையும் இந்த விழாவில் போடப் போகிறார்களாம். இந்தியன் 2 படம் உருவானதன் பின்னணிக்கான வீடியோவும் இந்த விழாவில் போடப் போகிறார்களாம். இந்தியன் தாத்தா கெட்டப்பில் கமல் வரப்போகிறார் என்றது வதந்தி தான்.

Indian2 invitation
Indian2 invitation

ஆனால் டான்ஸ் பண்ணும் கலைஞர்கள் இந்தியன் தாத்தா கெட்டப்பைப் போட்டு வருவார்களாம். 5000 பேர் இந்த ஆடியோ லாஞ்சைப் பார்க்கலாம். இதன் நேரடி ஒளிபரப்பு கிடையாதாம். ஜூன் மாதம் கடைசியில் இந்த ஆடியோ லாஞ்சை கலைஞர் டிவியில் ஒளிபரப்புவார்களாம். படத்திற்கான சில கிளிம்ப்ஸ் வீடியோக்களையும் வெளியிடப் போகிறார்களாம். ஆனால் இந்தப் படத்தோட டிரைலரை நாளை வெளியிட மாட்டார்களாம்.

இந்தப் படத்தோட டிரைலர் லாஞ்சும் பண்ணப் போகிறார்களாம். அப்படிப் போட்டால் ஆளாளுக்கு ஒரு கதை சொல்லி படத்தின் எதிர்பார்ப்பு குறைந்து விடும் என்பதால் அதை மட்டும் தள்ளி வைத்துள்ளார்களாம்.

இந்த ஆடியோ லாஞ்சில் கமல் மற்றும் இயக்குனர் ஷங்கர் என்ன பேசப்போகிறார்கள் என்பது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கான அழைப்பிதழையே வித்தியாசமாக வேற லெவலில் வைத்துள்ளார்களாம். அந்தக் கத்தி தான் இன்விடேஷனாம்.