More
Categories: Cinema News latest news

கம்பேக் இந்தியன்!.. ஷங்கர் இயக்கத்தில் கமல் மிரட்டும் இந்தியன் 2 இன்ட்ரோ எப்படி இருக்கு?.. தேறுமா?..

கடந்த 5 ஆண்டுகளாக பல பட்டி டிக்கெரிங் பார்த்து ஷங்கர் உருவாக்கி உள்ள இந்தியன் 2 படத்தின் இன்ட்ரோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது. இந்தியன் 2 படமாவது தமிழ் சினிமாவில் 1000 கோடி வசூலை ஈட்டுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்ட்ரோவை பார்த்தாலே வாய்ப்பில்லை ராஜா என்றே எண்ணத் தோன்றுகிறது.

காமிக் டைப்பில் கம்பேக் இந்தியன் என்கிற அனிருத்தின் சுமாரான இசையுடன் உருவாகி உள்ள இந்தியன் 2 இன்ட்ரோவை பார்த்த ரசிகர்கள் இதைத்தான் இத்தனை வருஷமா ஷங்கர் ஒட்டிக் கொண்டு இருந்தாரா? என கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: கமலுடன் மீண்டும் இணையும் அந்த நடிகை!… உதட்ட பத்திரமா பாத்துக்க செல்லம்!..

இந்தியன் 2 படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே. சூர்யா, நெடுமுடி வேணு என நடிகர்களின் காஸ்டிங் கூட ரசிகர்களுக்கு இன்றைய தேதியில் கனெக்ட் ஆகும் அளவுக்கு தெரியவில்லை.

பழைய இந்தியன் படத்தை குழி தோண்டி புதைத்து விட வேண்டாம் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது. இதில், இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களை அடுத்த ஆண்டு பேக் டு பேக் பொன்னியின் செல்வன் படங்களை போலவே ரிலீஸ் செய்து கல்லா கட்ட லைகா நிறுவனம் பக்கா பிளான் போட்டு வருவது தெரிகிறது.

இதையும் படிங்க: ஒரே நாளில் ரஜினியை மயக்கிய மனைவி லதா… காதலை சூப்பர்ஸ்டார் யார்கிட்ட முதலில் சொன்னாரு தெரியுமா..?

இந்தியன் 2 பெயருக்கான பவர்ஃபுல் லுக் அந்த பழைய இந்தியன் பட காட்சிகளில் மட்டுமே இருப்பதாகவும், பிரம்மாண்ட பாடல் காட்சிகள் கொஞ்சம் ரசிக்க வைப்பது குறிப்பிடத்தக்கது.  தமிழில் நடிகர் ரஜினிகாந்தும், இந்தியில் அமீர்கானும், மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் ராஜமெளலி மற்றும் கன்னடத்தில் கிச்சா சுதீப் வெளியிட்டுள்ளனர்.

Published by
Saranya M

Recent Posts