இந்தியன்2 கிரிஞ்ச் கூட்டம்… முதலில் நடிக்க இருந்த பிரபலங்கள் இவங்களா?
இந்தியன் 2 படத்தில் முதலில் நடிக்க இருந்த முக்கிய நடிகர்கள் குறித்த ஆச்சரிய தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன்2. 90களில் வெற்றி படமாக இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் உருவானது. முதலில் இப்படம் பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியது. படம் பிரம்மாண்டமாக இருக்கும் எனக் கூறப்பட்டது.
இதையும் படிங்க: தயாரிப்பாளரிடம் சவால் விட்ட எம்ஜிஆர்… 100 ரூபாய் பந்தயத்தில் ஜெயிச்சது யாரு?
பல வருடமாக ஷூட்டிங் நடத்தப்பட்டு இந்தியன்2 கடந்த மாதம் ரிலீஸ் ஆனது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத அளவு படம் பெரிய அளவில் எதிர்ப்பை சந்தித்தது. ரசிகர்களிடம் மோசமான விமர்சனங்களை குவித்தது. ஷங்கரின் இயக்கமா இது என கேள்வி கேட்கும் அளவுக்கு படம் அமைந்து இருந்தது.
கமல் போன்ற ஒரு நடிகரை வைத்துக்கொண்டு இப்படி சொதப்பி விட்டார்களே என குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுமட்டுமல்லாமல், படத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர் மற்றும் ஜெகன் உள்ளிட்ட முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். அவர்களின் நடிப்பும் பெரிய அளவில் விமர்சனத்தையே குவித்தது. கிட்டத்தட்ட கிரிஞ்ச் கூட்டம் எனவும் கலாய்த்தனர்.
இந்நிலையில் முதலில் இந்தியன்2 படத்தில் சித்தார்த் கேரக்டரில் முதலில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கவே பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர். ஆனால் அவருக்கு கால்ஷூட் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. அடுத்து, பிரியா பவானி சங்கர் கேரக்டரில் முதலில் ஐஸ்வர்யா ராஜேஷை நடிக்க வைக்கலாம் எனவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம்.
இதையும் படிங்க: அந்தகன் படத்துல என்ன பண்ணி வச்சிருக்கீங்க நவரச நாயகனை…? பொங்கி எழும் பிரபலம்…!
அதுமட்டுமல்லாமல், ஜெகன் கேரக்டரில் முதலில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அதுவும் நடக்கவில்லையாம். பாபி சிம்ஹா நடித்த முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி தான் நடிக்க இருந்தாராம். ஆனால் அவரும் சில காரணங்களால் நடிக்கவில்லை என கூறப்படுகிறது. இப்போது இந்த தகவல்கள் கசிந்துள்ள நிலையில், பரவாயில்லை தப்பிச்சீங்க எனவும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.