ஒரு ஹிட்டு எல்லாத்தையும் மாத்தும்!...விரைவில் துவங்கும் இந்தியன் 2.....
கமலை வைத்து ஷங்கர் இயக்கிய திரைப்படம் இந்தியன். இப்படம் 1996ம் ஆண்டு வெளிவந்தது.
திட்டமிட்டார். இதையடுத்து 23 வருடங்களுக்குப் பின் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதாக அறிவித்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் கமலுடன், காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடித்து வந்தனர்.
ஆனால், படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராதவிதமாக கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்தனர். எனவே படப்பிடிப்பும் பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் தயாரிப்பு தரப்பான லைக்காவுடன் ஷங்கருக்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாக மீண்டும் தொடங்கவிருந்த படப்பிடிப்பு தடைபட்டது.
பொறுத்து பொறுத்த பார்த்த ஷங்கர் இந்தியன் 2வை கிடப்பில் போட்டுவிட்டு, தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஒரு தெலுங்குப்படம் இயக்க சென்றுவிட்டார். பின்னர் மீண்டும் லைக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததால் படப்பிடிப்பு விரைவாக தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதுவரை அது நடக்கவில்லை.
இந்நிலையில், கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்துள்ள விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்திருப்பதால் இந்தியன்2 பட வேலையை லைக்கா நிறுவனம் மீண்டும் தூசி தட்டி துவங்கியுள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் கமலுக்கும் நாசுக்காக இதை தெரிவித்தார்.மேலும், இந்தியன் 2 பட வேலைகள் விரைவில் துவங்கும் என உதயநிதி ஸ்டாலினும் தற்போது தெரிவித்துள்ளார்.
லைக்கா நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களையும் வினியோகம் செய்யும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனமே பெற்றுள்ளது. எனவே, லைக்கா-உதயநிதி -கமல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் இந்தியன் 2 படத்தை துவங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் விக்ரம் படத்தின் வெற்றி இந்தியன் 2 பட வேலையை முடுக்கிவிட்டுள்ளது. விக்ரம் படம் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்தியன் 2 பட வேலைகளும் துவங்கவுள்ளது கமல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.