விபத்து.. உயிரிழப்பு.. வழக்கு.. 6 வருட போராட்டம்!.. கன்னித்தீவாக நீண்ட இந்தியன் 2 முடிவுக்கு வந்த கதை..

by sankaran v |
Indian 2
X

Indian 2

இந்தியன் 2 ஒரு பான் இண்டியா மூவி. 6 வருட போராட்டத்திற்குப் பிறகு தான் இந்தப் படம் வரும் ஜூலை 12ல் வெளியாக உள்ளது. கமல், ஷங்கர் காம்பினேஷன் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு. 1996ல் தமிழகத்தில் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்த படம் இந்தியன். தேசிய விருது, மாநில விருது, பிலிம்பேர் விருதுகள் என பல கிடைத்துள்ளன. ஆஸ்கர் விருதுக்கும் இந்தப் படம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியன் படம் பண்ணும்போது இருந்த ஊழல் இன்னும் 10 வருஷம் கழிந்த பின்னும் அது இருந்து கொண்டே தான் உள்ளது. இதைப் பார்த்த ஷங்கருக்கு ஏன் இந்தியன் 2 பண்ணக்கூடாது என்ற எண்ணம் எழுந்துள்ளது. அதற்கான ஸ்கிரிப்ட் எல்லாம் டெவலப் பண்ணிக்கிட்டே இருந்தாராம். கமலிடமும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்தாராம்.

2017ல் அதாவது 2.Oக்குப் பிறகு தான் இந்தியன் 2 பண்ணலாம் என்ற பேச்சுவார்த்தை நடந்தது. 2018ல் அதுவும் கமலின் பிறந்த நாள் அன்று இந்தியன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்கள். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு என்பதும் உறுதியானது.

2019 பொங்கலுக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டார்கள். அதே ஆண்டு ஜனவரி 18 முதல் சூட்டிங் என்றும் அறிவிக்கப்பட்டது. கமல், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரித்திசிங், விவேக், மனோபாலா, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, மாரிமுத்து, நெடுமுடி வேணு உள்பட பலர் நடிப்பதை அறிவித்தனர். அனிருத் இசை அமைக்கிறார்.

சித்தார்த் கேரக்டருக்கு சிம்பு, துல்கர் சல்மான் நடிக்க கேட்கப்பட்டது. ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் அவர்கள் நடிக்கவில்லை. அதே போல பிரியா பவானி சங்கர் கேரக்டருக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் கிட்ட கேட்டார்களாம். அதனால் தான் இவருக்கு வாய்ப்பு வந்ததாம். 2019 எம்.பி. எலெக்ஷன். கமலின் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. அதனால் கால்ஷீட் பிரச்சனை. சூட்டிங் தள்ளிப்போனது.

ஆகஸ்ட் 12ல் 2ம் கட்டப் படப்பிடிப்பு நடந்தது. சித்தார்த், ரகுல் பிரீத்திசிங், பிரியா பவானி சங்கர் காட்சிகள் படமாக்கப்பட்டன. 2020ல் சூட்டிங்கில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்து விபத்து நடந்தது. உதவி இயக்குனர் கிருஷ்ணா, மது, சந்திரன் என ஊழியர்களும் பலியாகினர். கமலும், இயக்குனர் ஷங்கரும் மயிரிழையில் உயிர் தப்பினர்.

Indian 2

Indian 2

காயமடைந்தவர்களுக்கும், உயிரிழந்தவர்களும் நிதி உதவி வழங்கப்பட்டது. அதனால் படப்பிடிப்பு தடைபட்டது. அதன்பிறகு கொரோனா லாக் டவுனில் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் கருத்து வேறுபாடு. கமலும் சரிவர கால்ஷீட் கொடுக்கவில்லை என்று பேசப்பட்டது. படம் டிராப் என்றும் சொன்னார்கள்.

அந்த நேரத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் கமல் இணைந்து விக்ரம் படத்தில் நடித்தார். ஷங்கரும் தெலுங்கில் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்திற்குப் போய்விட்டார். லைகா புரொடக்ஷன்ஸ் ஷங்கர் இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுத்த பின்னர் தான் வேறு படத்தில் பணியாற்ற வேண்டும் என வழக்குத் தொடர்ந்தது.

ஷங்கர் தரப்பில் இருந்து ஜூன் முதல் அக்டோபர் மாதத்திற்குள் முடித்துக் கொடுப்பதாக சொன்னார். அதன்பின் படமும் கிடப்பில் போடப்பட்டது. விக்ரம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. ஷங்கரும் கேம் சேஞ்சருக்குப் போய்விட்டார். விக்ரம் படத்தின் வெற்றி தான் இந்தியன் 2க்கு உயிர் கொடுத்தது. ஏன்னா விக்ரம் படத்தின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தான் திரும்பவும் கோ புரொடியூசராக இந்தியன் 2 படத்தில் இணைந்தது. அதன்பிறகு தான் இந்தியன் 2 படப்பிடிப்பு மறுபடியும் தொடர்ந்தது.

இதையும் படிங்க... ஷூட்டிங்கே இப்போதான் ஆரம்பிச்சிருக்கு… அதுக்குள்ள ஓடிடியில் சம்பவம் செய்த அஜித்குமார்…

பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பு நடந்தது. 2023ல் ஒரு இன்ட்ரோ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. அதற்கு கலவையான விமர்சனம் கிடைத்தது. கடைசியாக படம் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. ஜூன் என்றார்கள். அதன்பிறகு ஒரு பாடல் பாக்கி என்று சொன்னார்கள். அதனால் படம் ஜூலை 12 ரிலீஸ் என உறுதி செய்தார்கள். இன்னொரு பிளஸ் பாயிண்ட்டும் வந்தது. இந்தியன் 3 படமும் கூடவே தயாராகி விட்டது. அது 2025 பொங்கலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story