More
Categories: Cinema News latest news

இந்தியன்2 படத்தில் ரொமான்ஸ் செய்யும் சித்தார்த் மற்றும் ரகுல் ப்ரீத்… கமலுக்கு இல்லாத ஸ்பெஷலா?

Indian2: கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் இரண்டாவது சிங்கள் வெளியாகி இருக்கிறது. மெலோடி சிங்கிளாக இருக்கும் இந்த பாடல் காதலர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் லைகா புரோடக்‌ஷன் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து இயக்கும் திரைப்படம் இந்தியன்2. இப்படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் கொடுத்த முத்தம்!.. 2 நாட்கள் முகத்தை கழுவாமல் இருந்த நடிகை… அட அவரா?!..

இப்படம் அனிருத் இசையமைப்பில் உருவாகி வருகிறது. முதல் பாகத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார் என்பதால் இரண்டாவது பாகத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு அனிருத் இதை சரியாக செய்வாரா எனவும் பலர் பேசி வருகின்றனர். அந்த வகையில் பாரா என்ற பர்ஸ்ட் சிங்கிள் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது.

அப்பாடலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில் இரண்டாவது சிங்கிளான நீலோற்பம் வெளியாகி இருக்கிறது. இப்பாடல் சித்தார்த் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் இருவருக்கு இடையேயான பாடலாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பாடலில் அல்லி மலரை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாரதிராஜாவுக்கு முன்னாடியே ரேவதிக்கு ‘பளார்’ கொடுத்த பாண்டியன்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த களேபரம்!..

இபாடலை பாடி இருப்பது அபி வி மற்றும் ஸ்ருதிகா சமுத்ரலா. இருவரும் மெலோடிக்கு சரியாக உயிர் கொடுத்து இருக்கின்றனர். மேலும், அனிருத் இசையில் இரண்டாவது சிங்கிளும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்பாடல் எந்த அளவும் ரீச் பெறும் என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.

ஜூலை மாதம் திரைக்கு வரும் இப்படம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 2024ம் வருடத்தில் முதல் வெற்றிபடமாக இந்தியன்2 இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், படத்தின் பிரம்மாண்டம் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

 

நீலோற்பம் வீடியோ பாடலைக் காண: https://www.youtube.com/watch?v=6ZAm27NvFCY

Published by
Akhilan