விஜயை தாண்டிய கமல்!.. இந்தியன் 2 பட டிரெய்லர் வீடியோ வியூஸ் எவ்வளவு தெரியுமா?!..
ஷங்கரின் இயக்கத்தில் கமல் நடித்து 1996ம் வருடம் வெளியான திரைப்படம் இந்தியன். லஞ்சம், ஊழலுக்கு எதிராக சுதந்திர போராட்ட தியாகி ஒருவர் பொங்கியெழுந்து களை எடுப்பதுதான் கதை. இந்த படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் அசத்தலாக நடித்திருப்பார். கவுண்டமணி, சுகன்யா, ஊர்மிளா, மனிஷா கொய்ராலா என பலரும் நடித்து வெளியான இப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
அதன்பின் பல வருடங்கள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்கர் முடிவெடுத்தார். இப்படத்தை அதிக பொருட்செலவில் தயாரிக்க லைக்கா நிறுவனம் முடிவெடுத்தது. ஆனால், அது முடியாமல் போகவே உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் உள்ளே புகுந்து பணம் முதலீடு செய்தது.
அதன்பின்னரே இந்தியன் 2 படம் டேக் ஆப் ஆனது. இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் இந்தியன் தாத்தா வந்தல் என்ன நடக்கும் என யோசித்து கதை எழுதி இருக்கிறார் ஷங்கர். அதோடு, இந்தியன் படத்தில் தாத்தா தமிழ்நாட்டில் நடக்கும் ஊழலை மட்டும் தட்டி கேட்டார். இந்த படத்தில் இந்தியன் தாத்தா இந்தியா முழுவதும் சென்று உழல்வாதிகளை தண்டிப்பார் என ஷங்கர் சொல்லி இருக்கிறார்.
இந்நிலையில், இந்த படம் மூலம் விஜயை கமல் ஓவர் டேக் செய்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?. ஆனால், உண்மையில் இது நடந்திருக்கிறது. இப்போது முன்னணி நடிகராகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும், அதிக ரசிகர்களை கொண்ட நடிகராகவும் இருப்பவர் விஜய்.
பாடல், டீசர், டிரெய்லர் என விஜய் நடிக்கும் படம் தொடர்பான எந்த வீடியோ வெளியானாலும் ஒரே நாளில் 10 லட்சம் பார்வையாளர்களை தாண்டிவிடும். ஆனால், கோட் படத்தின் 2வது சிங்கிளான ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் வீடியோ வெளியாகி 3 நாட்கள் ஆகியும் இதுவரை 7 மில்லியன் வியூஸ்களை மட்டுமே பெற்றிருக்கிறது.
ஆனால், நேற்று மாலை 7 மணிக்கு வெளியான இந்தியன் 2 டிரெய்லர் இன்று மதியம் 12.30 மணிக்கே 10 லட்சம் வியூஸ்களை தாண்டிவிட்டது. இந்த தகவலை லைக்கா நிறுவனமே அதிகாரப்பூர்வமாக தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறது.