Indian 3: இந்தியன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ம் பாகத்தை ஷங்கர் இயக்கத்தில் லைகா தயாரித்தது. படம் அட்டர்பிளாப் ஆனது. லைகா தொடர்ந்து தயாரித்த விடாமுயற்சியும் படுதோல்வி. இனி லைகா அவ்ளோதான். கடையை மூடியாச்சுன்னு சொன்னாங்க. இந்தியன் 3 மேல ஷங்கர் முழு நம்பிக்கை வைத்து இருந்தார். படத்திற்கு இன்னும் 10 நாள் சூட்டிங் பாக்கி. ஒரு பாடலும் பாக்கி.
அதற்கு செலவாகும் என்று சொல்ல லைகா அதற்கு மேல் செலவு செய்யத் தயாராக இல்லை. எடுத்த வரை போதும். நெட்பிளிக்ஸ்ல போடலாம் என்று முடிவு செய்தது. அதற்கு கமலும், ஷங்கரும் ஏற்பார்களா என தெரியாத நிலையில் படம் டிராப் ஆனது. அதன்பிறகு ரெட்ஜெயண்ட் அந்தப் படத்தைக் கையில் எடுத்தது. இந்த நிலையில் என்ன நடக்கிறது என்பதை இப்போது பார்ப்போம். தற்போது இதுகுறித்து பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி சொன்னது இதுதான்…

லைகா நிறுவனத்து கையில இருக்குற ஒரே படம் இந்தியன் 3. அதையாவது எப்படியாவது முடிச்சி ரிலீஸ் பண்ணலாம்னு பார்க்குறதாம். கமல் டீம் இந்தியன் 3 படத்தைப் பார்த்துட்டாங்களாம். ரெட் ஜெயன்ட் டீமும் பார்த்தாச்சாம். சுபாஷ்கரன் நானும் படத்தைப் பார்க்கணும்னு விரும்புறாராம். ஷங்கர் இல்ல.
அங்கிருந்து கன்டன்ட்டை அனுப்ப முடியாதுன்னு சொல்லிட்டாராம். என்ன காரணம்னா 2.ழ படத்தை எடுக்கும்போது இப்படி முக்கியமான ஒரு காட்சியை படத்துல இருந்து சுபாஷ்கரனுக்கு அனுப்ப அவரும் அதை ஆர்வத்துல நண்பர் ஒருவருக்கு அனுப்ப அவரு நெட்ல போட்டு விட்டுட்டாராம். அதனால ஷங்கர் பயங்கர அப்செட். அந்த மாதிரி மறுபடியும் நடந்துடக்கூடாது. அதனால தான் ஷங்கர் முரண்டு பிடிச்சிருக்காரு.
அப்புறம் யார் யாருலாமோ கன்வின்ஸ் பண்ணி படத்தை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தறதுக்காக சம்மதிச்சிட்டாராம். தமிழ்க்குமரன்கிட்ட டிபிஎக்ஸ் பார்மேட்ல அந்தப் படத்தைக் கொடுத்துருக்காராம். லண்டன் லைகா ஆபீஸ்க்கு தமிழ்க்குமரன் கொண்டு போயிருக்காரு.
சுபாஷ்கரன் பார்க்கப் போறாரு. நாளை சுபாஷ்கரன் வேறொரு வேலையா சென்னை வர்றாராம். அப்படி வந்ததும் இந்தியன் 3 குறித்து ஆலோசனை நடக்க உள்ளதாம். அது பாசிடிவ்வா இருக்கும் பட்சத்தில் லைகா மீண்டும் களமிறங்கி படங்களைத் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.