எல்லாம் செஞ்சி கடைசியில அந்த கொண்டைய மறைக்கலயே!.. வடிவேல் காமெடியாக மாறிய இந்தியன் 2..

by Akhilan |
எல்லாம் செஞ்சி கடைசியில அந்த கொண்டைய மறைக்கலயே!.. வடிவேல் காமெடியாக மாறிய இந்தியன் 2..
X

Indian 2: தற்போதைய சூழலில் தமிழ் நட்சத்திரங்களுக்கு சர்ச்சையில் சிக்குவது என்னவோ சக்கரை பொங்கல் சாப்பிடும் அளவுக்கு தான் இருக்கிறது. ரசிகர்களே கண்டுப்பிடிக்கும் அளவுக்கு தப்பை வைத்து திட்டு வாங்குகிறார்கள். தெரிஞ்சே செஞ்சு வைரலாக்கும் ஐடியாவாக கூட இருக்கும் என ஒரு பேச்சு இருக்கிறது.

சமீபத்தில் ஜெயிலர் படத்தின் சர்ச்சையை தொடர்ந்து விஜயின் லியோ அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பலரின் ஓவர் எதிர்பார்ப்பால் படம் பெரிய அளவில் விமர்சனரீதியாக விமர்சிக்கப்பட்டது. இதையடுத்து வசூலை பட நிறுவனமே அதிகாரப்பூர்வமாக சொல்லியும் பலரும் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அந்த நடிகர் கொடுத்த முத்தத்தில் மயங்கி நின்ற திரிஷா.. சீக்ரெட்டை லீக் செய்த பயில்வான் ரங்கநாதன்!…

இவர்கள் பிரச்னை ஒரு பக்கம் ஓய்ந்த நிலையில் நான் இருக்கேன்ல என்ற லெவலில் தானாக வந்து சிக்கி இருக்கிறார் கமல்ஹாசன். அதுவும் அவர் நடிப்பில் பல வருடங்களாக உருவாகி வந்த இந்தியன் 2 படத்தில் தான் இந்த பிரச்னை. இப்படத்தின் இண்ட்ரோ வீடியோ கடந்த 3ம் தேதி ரிலீஸானது.

ஷங்கர் இயக்கத்தில் 1996ம் ஆண்டு ரிலீஸான இந்தியன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் கமல்ஹாசன் இரண்டு வேடத்திலும் சுகன்யா, கஸ்தூரி, மனிஷா கொய்ராலா ஆகியோர் நடித்து இருந்தனர். இப்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது.

இதையும் படிங்க: பாத்ரூமில் வேண்டாத வேலை பார்த்த பிரதீப்! சரியான தண்டனையை கொடுத்த கமல்..

அதாவது இந்தியன் 2 படம் 2023ம் ஆண்டு நடப்பது போல காட்சிகள் இண்ட்ரோ வீடியோவில் இருந்தது. அதில் சேனாதிபதியாக நடித்திருந்த கமல் முதல் பாகத்தில் 1918ம் ஆண்டு பிறந்ததாக ஒரு காட்சியில் சொல்லப்பட்டு இருக்கும். அந்த கணக்கின் படி பார்த்தால் இந்த படத்தில் கமலுக்கு 105 வயது இருக்கும் எனக் கலாய்த்து வருகின்றனர்.

105 வயது ஆள் சண்டை செய்ய முடியுமா? ஆனால் இதிலும் ஷங்கர் ட்விஸ்ட் வைத்து இருக்கலாம். ரசிகர்களே யோசிக்கும் போது அதை கண்டிப்பாக இயக்குனர் ஷங்கர் யோசித்து இருப்பார். அதற்கு தகுந்த காரணங்கள் படத்தில் வலுவாக காட்டப்படும் என்றும். படம் ரிலீஸ் வரை அமைதியா இருங்க எனவும் கமலியன்ஸ் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Next Story