Connect with us
pradeep

Biggboss Tamil 7

பாத்ரூமில் வேண்டாத வேலை பார்த்த பிரதீப்! சரியான தண்டனையை கொடுத்த கமல்..

BiggBoss Season 7: விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி. ஒவ்வொரு வாரமும் என்ன நடக்குமோ என்ற ஒரு ஆர்வத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள்.

இன்று  கமல் வரும் எபிசோடில் எதிர்பாராத சில திருப்பங்கள் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே ஒட்டுமொத்த ஹவுஸ் மேட்ஸும் பிரதீப் மீது கொலை வெறியில் இருக்கும் போது கூல் சுரேஷுடனான பிரச்சினையில் கமல் சாரே வந்து சாரி சொல்ல சொன்னாலும் சொல்ல மாட்டேன் என்று மல்லுக்கு நின்றார் பிரதீப்.

இதையும் படிங்க: கமல் கேட்ட கேள்வியில் ஆடிப்போன தயாரிப்பாளர்…. அப்படி என்னதான் கேட்டாரு?

அதுமட்டுமில்லாமல் கெட்ட கெட்ட வார்த்தைகளை பேசிக் கொண்டு சக போட்டியாளர்களின் வெறுப்பையும் சம்பாதித்தார். இதை பற்றி கேட்டால் நான் அப்படித்தான் செய்வேன். இப்படித்தான் இருப்பேன். முடிஞ்சத பார்த்துக்கோ என இந்த வார்த்தைகளை மட்டுமே பேசி கொண்டிருக்கிறார் பிரதீப்.

இது ஒரு கட்டத்தில் பிரதீப் மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 5 நாள்களாக தாங்க முடியாத ஒரு சம்பவத்தை செய்த பிரதீப்பிற்கு கண்டிப்பாக கமல் தக்க அறிவுரைகளை வழங்க வேண்டும் என ரசிகர்கள் இணையத்தில் பதிவு செய்து வந்தனர்.

இதையும் படிங்க: சூப்பர் ஜோடி! இணையத்தை தெறிக்கவிட்ட புகைப்படம் – ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்த சிவாங்கி

இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் பிரதீப்பிற்கு எதிராக செங்கொடி தூக்குபவர்கள் யார் யார் என கேட்க, ஜோவிகா, அன்னபாரதி, மணி, பூர்ணிமா, விஷ்ணு, மாயா , நிக்‌ஷன் என இவர்கள் எழுந்து நின்று அவரவர் கருத்துக்களை சொன்னார்கள்.

நிறைய கெட்டவார்த்தைகளை பேசுவதாக ஜோவிகாவும் என்னுடைய அரைஞாண் கயிறை பற்றி சில கமெண்ட்களை ப்ரதீப் பாஸ் செய்தார் என ரவீனாவும் நான் பண்றததான் பண்ணுவேன் என நிக்‌ஷனும் என்கிட்ட யாராவது வச்சிக்கிட்டா அசிங்க அசிங்கமா கேட்பேன் என்று சொல்வதாக விஷ்ணுவும் கூற,

இதையும் படிங்க: அந்த நடிகர் கொடுத்த முத்தத்தில் மயங்கி நின்ற திரிஷா.. சீக்ரெட்டை லீக் செய்த பயில்வான் ரங்கநாதன்!…

பாத்ரூம் போகும் போது கதவை திறந்து வைத்துக் கொண்டே போனார் என மணி சொல்லும் போது ‘ஆமாம் வேணும் என்றேதான் அப்படி செய்தேன்’ என கமல் முன்னாடியே பிரதீப் கூறுவது போல் அந்த ப்ரோமோ வீடியோ வெளியாகியிருக்கிறது. இதெல்லாம் கேட்டுவிட்டு ‘சரி இதற்கு நான் என்ன தீர்ப்பு வழங்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?’ என மற்ற போட்டியாளர்களிடம் கமல் கேட்கிறார்.

அதனால் இன்றைய கமல் எபிசோடில் எதிர்பாராத சில திருப்பங்கள் ஏற்படலாம் என்று அந்த ப்ரோமோ பார்க்கும் போது தெரிகிறது.

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top