விஜய் மட்டும்தானா?!. நானும் வரேன்!.. ரீ ரிலீஸாகும் கமலின் சூப்பர் ஹிட் திரைப்படம்!..

ரீ ரிலீஸ் என்பது இப்போது இல்லை. பல வருடங்களுக்கு முன்பிருந்தே இருக்கிறது. எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியின் படங்கள் பல நூறு முறை ரீ ரிலீஸ் ஆகியிருக்கிறது. 30 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தின் பல இடங்களிலும் டூரிங் டாக்கிஸ் இருந்தது. இதில், எம்.ஜி.ஆரின் படங்கள் தொடர்ந்து ரீ ரிலீஸ் செய்யப்படும்.

எம்.ஜி.ஆரின் படங்கள் எத்தனை முறை ரீ ரிலீஸ் செய்யப்பட்டாலும் அதற்கென பாமர ரசிகர் கூட்டம் இருந்தது. அனேகமாக தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆரின் படங்கள்தான் அதிகம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அவருக்கு பின் நடிகர் திலகம் சிவாஜி இருக்க வாய்ப்பிருக்கிறது. அவர்களுக்கு பின் வந்தவர்கள் ரஜினி - கமல் ஆகியோர்.

இதையும் படிங்க: நீங்க நல்லா நடிச்சாலும் படம் ஏன் ஓடுறதில்ல?!.. அஜித்திடம் கேட்ட கேள்வி!.. ஏகே சொன்ன நச் பதில்!..

ஆனால், அவர்களின் படங்கள் அதிகம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது இல்லை. அதேநேரம் எம்.ஜி.ஆரின் படங்கள் இப்போதும் புதிய தொழில்நுட்பத்தில் நல்ல பிரிண்டோடு தியேட்டரில் வெளியாகி வருகிறது. ரஜினியின் பாபா திரைப்படம் கூட ரி ரிலீஸ் செய்யப்பட்டு வரவேற்பை பெறவில்லை.

ஆனால், 20 வருடங்களுக்கு முன்பு வெளிவந்து ஹிட் அடித்த கில்லி திரைப்படம் சமீபத்தில் ரி ரிலீஸ் செய்யப்பட்டு 20 கோடி வரை வசூல் செய்து சினிமா உலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. எனவே, அஜித்தின் தீனா, மங்காத்தா போன்ற படங்களும் ரி ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால், படங்கள் ஓடவில்லை.

இதையும் படிங்க: ரஜினி படத்துக்கே கண்டிஷனா?!.. இது என்னடா வேட்டையனுக்கு வந்த சோதனை!..

இந்நிலையில், ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான இந்தியன் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. கில்லி படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம்தான் இந்தியன் படத்தை தயாரித்தவர். இந்தியன் படம் வருகிற ஜூன் 7ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகவுள்ளது.

indian

indian

இந்தியன் 2 ஜூலை 12ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்தியன் முதல் பாகம் ஒரு மாதத்திற்கு முன்பு வெளியாகவுள்ளது. இந்த படத்தை பார்க்கும் 2கே கிட்ஸ்களுக்கு இந்தியன் 2 பட கதை நன்றாக புரியும் என சொல்லப்படுகிறது. இந்தியன் படம் ரீ ரிலீஸில் வசூலை அள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Related Articles

Next Story