இதுக்கு அவர் ஒத்துக்கணுமே? இனியும் வெளியாகுமா கமல்ஹாசனின் இந்தியன்3?

by Akhilan |   ( Updated:2025-04-04 05:00:33  )
இதுக்கு அவர் ஒத்துக்கணுமே? இனியும் வெளியாகுமா கமல்ஹாசனின் இந்தியன்3?
X

indian

Indian3: தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர்ஹிட் திரைப்படமான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில் மூன்றாம் பாகம் குறித்த அப்டேட்கள் வெளியாகி இருக்கிறது.

சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன். 90களில் பெரிய பொருட் அளவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அப்போதே 100 கோடி வரை வசூலை குவித்தது. இரட்டை வேடங்களில் கமல்ஹாசன் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்திய அசத்தியிருப்பார்.

இதைத்தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழு முடிவு எடுத்தது. அந்த வகையில் லைக்கா நிறுவனம் தயாரித்த இந்தியன் இரண்டாம் பாகத்தின் சூட்டிங் பல ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கப்பட்டது.

அந்த நேரத்தில் கொரோனோ லாக்டவுன் ஏற்பட பல தடைகளை தாண்டி இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியது. ஆனால் படத்தின் நீளம் அதிகமாக இருந்ததால் அதையே இரண்டு பாகங்களாக வெளியிடப்பட குழு திட்டமிட்டது.

#image_title

அந்த வகையில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. மிகப்பெரிய சூப்பர் ஹிட் திரைப்படமான இந்தியன் இரண்டாம் பாகம் ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் விமர்சனத்தை குவித்தது. இதுவரை கமலின் எந்த படமும் விமர்சிக்கப்படாத வகையில் அதிக அளவில் இந்தியன்2 விமர்சிக்கப்பட்டது.

இதனால் தற்போது இப்படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகும் என்ற கேள்வி எழுந்து வருகிறது. இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடவும் பேச்சுவார்த்தை நடந்தது. அதை தொடர்ந்து நஷ்டத்தால் படத்தின் மூன்றாம் பாகத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்றும் பல பேச்சுகள் எழுந்தது.

இந்நிலையில் தற்போது மூன்றாம் பாகத்தின் காட்சிகளுக்காக இன்னும் 20 நாட்கள் ஷூட்டிங் நடத்தப்பட வேண்டும் என்பதால் கமல்ஹாசனிடம் கால்சீட் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனால் இந்தியன் இந்தாண்டு வெளியாக வாய்ப்பு இல்லை என்றாலும் கண்டிப்பாக திரையரங்கில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story