கமல் படத்தின் கதையை சுட்ட ஷங்கர்… அதில் கமலையே நடிக்க வைத்த ஹைலைட் சம்பவம்!

shankar
Kamalhassan: ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த முக்கிய படமாக பார்க்கப்படும் இந்தியன் குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
90களில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் என்ற பெருமையோடு தயாரானது ... இந்தியன் திரைப்படம். அப்போதே 10 கோடி பட்ஜெட்டில் இப்படத்தினை ஏ.எம்.ரத்னம் தயாரித்தார். ஜென்டில்மேன் படத்தின் வெற்றிக்கு பின்னர் ஷங்கரின் அடுத்த படமாக இந்தியன் உருவாக இருந்தது.
முதலில் இப்படத்தின் ஹீரோவாக ரஜினியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்க முடியாது என மறுத்துவிட்டார். அவர் தொடர்ந்து தெலுங்கு நடிகர் ராஜசேகரை இந்தியன் வேடத்திலும், மகன் வேடத்தில் நாகர்ஜூனாவிடமும் கேட்கப்பட்டது.
ஆனால் அதுவும் நடக்காமல் போனது. இதை தொடர்ந்து இந்த கதையை ஷங்கர் கமல்ஹாசனிடம் சொல்லி இருக்கிறார். ஏன்யா நான் நடிச்ச படக்கதையை என்கிட்டயே சொல்லுறீயா என்றாராம். கமல் மற்றும் சிவாஜி கணேசன் இருவரும் இணைந்து 1977ம் ஆண்டு நடித்த நாம் பிறந்த மண் படத்தின் கதையும் இதான்.

இதனால் கமலும் நடிக்க முடியாது என்றாராம். ஆனால் ஏ.எம் ரத்னம் முழு சம்பளத்தையும் கொடுத்து லாக் செய்துவிட்டார். ஐஸ்வர்யா ராயிடம் ஹீரோயினாக பேச அவர் மறுத்துவிட மனிஷா கொய்ராலா நடித்து இருக்கிறார்.
அதுபோல அம்மா வேடத்துக்கு ஊர்வசி மற்றும் ராதிகாவிடம் பேச அவர்களும் கால்ஷீட் பிரச்னையால் நடிக்காமல் போக அந்த வேடத்தினை ஏற்றார் சுகன்யா. ஆனால் சுகன்யா படம் முடிந்து தன்னுடைய அனுமதி இல்லாமல் படக்குழு காட்சிகளை படத்தில் இணைத்து இருப்பதாக வழக்கு வேறு தொடர்ந்தார்.
பின்னர் அந்த கேஸை முடித்து படக்குழு இப்படத்தினை தமிழிலும், இந்தியிலும் ரிலீஸ் செய்து சூப்பர்ஹிட் வெற்றியை பெற்றது. 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட 60 கோடி வரை வசூல் குவித்தது. இப்படத்திற்காக கமலுக்கு தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
சிறந்த வெளிநாட்டு படமாக அகாடமி விருதுக்கு கூட பரிந்துரை செய்யப்பட்ட இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் யாரும் இதுவரை அடையாத மிகப்பெரிய விமர்சனத்துக்கு உள்ளானது தான் கமல் கேரியரில் நடந்த பெரிய கொடுமையே.