கோட் படத்தில் குட்டி விஜயாக கலக்கியவர் இவர்தான்!.. அட நம்ம இன்ஸ்டாகிராம் பிரபலமா!
Goat: வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம்தான் கோட். வழக்கமான இரட்டை வேடமாக இல்லாமல் விஜயை மிகவும் இளவயதில் காட்டி இருக்கிறார்கள். விஜயின் மகனை வில்லன் மோகன் தூக்கிக் கொண்டு போய் வளர்த்து அப்பா விஜய்க்கு எதிராக அவரை தூண்டிவிடுவதுதான் படத்தின் கதை.
இதற்காக டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். பொதுவாக இந்த டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை ஹாலிவுட்டில் அதிகம் பயன்படுத்துவார்கள். இதன் மூலம் 50 வயதுள்ள ஒருவர் 20 வயதில் எப்படி இருப்பார் என்பதை கூட திரையில் கொண்டுவர முடியும். அது ஏற்றுக்கொள்வது போலவும் இருக்கும்.
ஹாலிவுட்டில் ஜெமினி மேன் என்கிற படம் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்தது. அதில் ஹீரோவை போல ஒரு சிறு வயது வாலிபனை குளோனிங் செய்து ஹீரோவை கொல்ல வில்லன் அனுப்புவார். வில்லன் கெட்டவன் என்பதை புரிந்து கொண்டு இறுதியில் ஹீரோவும், ஹீரோவின் குளோனிங்கும் இணைந்து வில்லனை பழிதீர்ப்பார்கள்.
இந்த படத்தின் கதையில் இன்ஸ்பிரேஷன் ஆகியே வெங்கட்பிரபு கோட் படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறார். கோட் படத்தில் விஜய்க்கு அவரின் மகன் விஜயே வில்லனாக வருவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. அது குளோனிங் செய்யப்பட்ட விஜய் என்றும் அதை வெங்கட்பிரபு சரியாக காட்சியில் கொண்டுவரவில்லை என்றும் சொல்கிறார்கள்.
இந்த படத்தில் சிறு வயது விஜயாக நடித்திருந்தது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வரும் அயாஸ் கான் என்பவர்தான். இவரை நடிக்க வைத்து டீஏஜிங்கில் விஜயின் இமேஜை பொறுத்தி காட்சிகளை எடுத்திருக்கிறார் வெங்கட்பிரபு. இந்த வாய்ப்பை கொடுத்த வெங்கட்பிரபுவுக்கு ரியாஸ் நன்றியும் சொல்லி இருந்தார்.
வருங்காலத்தில் இந்த டீ ஏஜிங் தொழில்நுட்பம் இயக்குனர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கங்குவாக்கு ரிலீஸ் தேதியை லாக் செய்த சூர்யா!.. அப்ப வேற படம் வராம இருக்கணும்!..