Cinema News
மிஸ் ஆன ‘23ஆம் புலிகேசி’ பட வாய்ப்பு! வடிவேலுக்கு முன் நடிக்க இருந்த நடிகர் இவர்தான் – ஐய்யோ விட்டுடீங்களே
Actor Vadivelu: தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் கவுண்டமணி – செந்திலுக்கு பிறகு கொடி கட்டி பறந்தவர் வைகைப்புயல் வடிவேலு. கவுண்டமணி – செந்தில் நடித்த படங்களில் துணை நகைச்சுவை நடிகராக களம் இறங்கினார் வடிவேலு.
ஒரு கட்டத்தில் வடிவேலுவை ஏளனமாய் நடத்தியதாக கவுண்டமணி பற்றி ஒரு சில பிரபலங்கள் கூறியிருக்கின்றனர். அவர்களின் வாய்ப்பு குறைய தொடங்கவே வடிவேலுவின் ஆதிக்கம் தொடங்கியது. எண்ணிலடங்கா படங்களில் நடித்து மக்களின் பேராதரவை பெற்று விளங்கினார்.
இதையும் படிங்க: மீண்டும் பிக் பாஸ் பிரபலத்துக்கு சான்ஸ் கொடுத்த அஜித்குமார்!.. அவருக்கு ஈக்வலா செம ஸ்லிம்மாகிட்டாரே!..
சினிமாவில் இருக்கும் அத்தனை முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்திருக்கிறார். தன் உடல் மொழியால் அனைவரையும் சிரிக்க வைப்பவர். விதவிதமான முக பாவனைகளை மாற்றிக் கொண்டு நகைச்சுவை செய்வதில் வல்லவர்.
இந்த நிலையில் அவரை ஹீரோவாக ஏற்றுக் கொண்ட திரைப்படம் என்றால் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி. அந்தப் படத்தை சிம்புதேவன் இயக்கினார்.அந்தப் படம் வடிவேலுவுக்கு மேலும் பல புகழைப் பெற்றுத் தந்தது. ஆனால் முதலில் அந்தப் படத்தில் வடிவேலு நடிக்க இஷ்டம் இல்லாமல் தான் இருந்தாராம்.
இதையும் படிங்க: அப்பாவ மிஞ்சிய புள்ள! பாட்டு வேணும்னா இங்க வரனும் – யுவன் சங்கர் ராஜாவால் ‘தளபதி 68’க்கு வந்த சிக்கல்
சிம்புதேவன் பல முறை பேசி அதன் பிறகே வடிவேலுவை சம்மதிக்க வைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் வடிவேலுவுக்கு முன்பு இம்சை அரசன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது ஜெயராம் மற்றும் பிரபுதேவாவாம். ஆனால் அவர்களிடம் கேட்டதற்கு ஏதோ காரணத்தால் அவர்களால் நடிக்க முடியாமல் போனதாம்.
ஆனால் பிரபுதேவா மற்றும் ஜெயராம் ஆகிய இருவருமே அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர்கள்தான். இருவருக்குமே ஹுயூமர் சென்ஸ் அதிகம். அதனால் பெரிய வித்தியாசம் எல்லாம் இருந்திருக்காது.
இதையும் படிங்க: தனது அப்பா கெட்டப்பில் ரஜினி நடித்த படம்!.. அப்பா மேல இவ்வளவு பாசமா?!..