Daniel Balaji: நடிகர் டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. ஆனால் அவர் சில பிரபலங்களுக்காக சினிமா துறையில் இறங்கி செய்த சம்பவம் ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகர் டேனியல் பாலாஜி முறையாக நடிப்புக்கு படித்து சினிமாவுக்கு வந்தவர். அப்படி தான் அவருக்கு மருதநாயகம் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அந்த படம் நடக்கவே இல்லை. இதையடுத்து அவருக்கு சித்தி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படிங்க: இவ்வளவு டைட்டா போட்டா ஹாட் பீட் எகிறுது!.. அரை ஜாக்கெட்டில் அழகை காட்டும் தமன்னா!..
அதில் இருந்து, பாலாஜி என்னும் நடிகர் டேனியல் பாலாஜியாக மாறினார். தொடர்ந்து சீரியல் வாய்பே கிடைத்து கொண்டு இருக்கிறது. இங்கையே இருந்தால் சீரியலே வாழ்க்கையாகி விடும் என்பதால் கோலிவுட் பக்கம் திரும்புகிறார். சின்ன சின்ன வேடங்களில் நடித்தாலும் அவருக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதை தொடர்ந்து அவருக்கு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்தார்.
வில்லன் அமுதனை யாராலும் மறக்கவே முடியாது. அந்த படத்தில் நடிக்கும் போது அமெரிக்காவில் ஷூட்டிங் நடந்ததாம். பிணத்துக்கு மேக்கப் போட அங்குள்ள நிறுவனங்கள் 50 ஆயிரம் டாலர் வரை வேண்டும் எனக் கேட்டார்களாம். ஆனால் டேனியல் பாலாஜி எனக்கு 100 டாலர் தாங்க எனக் கேட்டாராம். கௌதம் மேனனுக்கு என்னவென்று புரியாமல் அவர் கேட்டதுக்காக கொடுத்தாராம்.
இதையும் படிங்க: என் படத்தில் விஜய் நடிக்க மறுத்தும் அவர் கூட நடிக்க காரணம்! கௌதம் மேனன் கூறிய சூப்பர் தகவல்
நேராக போய் மேக்கப் பொருட்களை வாங்கி கொண்டு வந்து பிணங்களுக்கு தனி ஆளாக போட்டு முடித்தாராம். இதுபோல பைரவா படத்தில் கோட்டை வீரன் கேரக்டரில் நடிக்க டேனியல் பாலாஜிக்கு வாய்ப்பு வந்து இருக்கிறது. டைரக்டர் பரதன் அவரை மொட்டை அடிக்க வேண்டும் என்றாராம்.
ஆனால் விஜய் அவர் எவ்வளோ பெரிய நடிகர். அவரிடம் போய் அப்படி கேட்கிறீர்களே? அதெல்லாம் வேண்டாம் என்றாராம். ஆனால் அடுத்த நாளே மொட்டையுடன் வந்து நின்று அதிர்ச்சி கொடுத்தாராம். இது தான் எனக்கு முக்கியம். மற்ற படங்களின் ஷூட்டிங்கை பின்னால் பார்த்துக்கிறேன் எனக் கூறினாராம்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…