Connect with us

Cinema News

ஏழு வயதில் வந்த நடிப்பு வெறி… விஜய்க்கு சொன்ன வரலாற்று கதை… சசிகுமாரின் யாரும் அறியாத பக்கங்கள்..

தான் இயக்கிய முதல் திரைப்படமான “சுப்ரமணியபுரம்” திரைப்படத்திலேயே தமிழின் ட்ரெண்ட் செட்டராக உருவாகியவர் சசிகுமார். அதன் பின் சசிகுமார் “ஈசன்” திரைப்படத்தை இயக்கினார். ஆனால் அதன் பின் ஏனோ சசிகுமார் படம் இயக்கவில்லை.

எனினும் பல திரைப்படங்களில் கதாநாயகனாக வலம் வந்து ரசிகர்களிடம் நீங்கா இடம்பிடித்தார் சசிகுமார். சசிகுமார் தொடக்கத்தில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எனினும் சசிகுமார் பற்றி நாம் அறியாத சில சுவாரசிய தகவல்களை இப்போது பார்க்கலாம்.

தனது ஏழு வயதிலேயே சினிமா மீது மோகம் கொண்டவர் சசிகுமார். தனது பள்ளிக்காலங்களிலேயே பல மேடை நாடகங்களில் நடித்த சசிகுமார், தனது பள்ளியிலேயே திரையிடப்பட்ட திரைப்படங்களை விரும்பி பார்த்து தனது சினிமா ஆர்வத்தை வளர்த்துகொண்டார்.

தொடக்கத்தில் பாலாவிடம் சசிகுமார் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் என்பதை பார்த்திருப்போம். பாலாவைத் தொடர்ந்து இயக்குனர் அமீருடனும் சில திரைப்படங்களில் சசிகுமார் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

“சென்னை 28” திரைப்படத்தின் போஸ்டரை மட்டுமே பார்த்த சசிகுமார், உடனே நடிகர் ஜெய்யை தனது “சுப்ரமணியபுரம்” திரைப்படத்திற்கு கதாநாயகனாக தேர்வு செய்தார்.

சுப்ரமணியபுரம், ஈசன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் சசிகுமார். பிரபல வரலாற்று எழுத்தாளரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசனுடன் இணைந்து ஒரு வரலாற்றுக் கதையை விஜய்யிடம் கூறியிருக்கிறார். ஆனால் பட்ஜெட் காரணமாக அத்திரைப்படம் கைவிடப்பட்டது.

சசிகுமார் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற “நாடோடிகள்” திரைப்படத்தில் சசிகுமார் ரோலுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தவர் ஜெய். ஆனால் சில காரணங்களால் ஜெய் நடிக்கவில்லை.

சர்வதேச வாள்வீச்சு போட்டியில் தங்கம் வென்ற இந்தியாவைச் சேர்ந்த முதல் வீராங்கனையான பவானி தேவி, தனது தொடக்க காலத்தில் பயிற்சிக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டபோது அவருக்கு பண உதவி செய்தவர் சசிகுமார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top