More
Categories: Cinema News latest news

குணா குகைக்காக கஷ்டப்பட்ட கமல்… ஒரே விசிட்டில் ஈஸியான ஐடியாவை பிடித்த மஞ்சுமெல் பாய்ஸ்!

Guna Guhai: கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான குணா திரைப்படத்தில் இடம்பெற்று இருந்த குணா குகையை வைத்து சமீபத்தில் வெளிவந்த மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. தற்போது அந்த படத்தில் இடம்பெற்ற குகை குறித்து ஆச்சரிய தகவல் வெளியாகி இருக்கிறது.

கமல் நடிப்பில் இயக்குனர் சந்தான பாரதி இயக்கிய திரைப்படம் தான் குணா. இப்படத்தில் கமலை விட அந்த குகை தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.  திரைப்படம் வெளியான பின் நாட்களில் அந்த குகையை, குணா குகை என பெயர் வைக்கும் அளவு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.  இப்படத்தில் கொடைக்கானலில் ஆள் நடமாட்டமே இதுவரை யாருமே வராத ஒரு இடத்தை கமலும், சந்தான பாரதியும் தேடி அலைந்தனராம்.

Advertising
Advertising

இதையும் படிங்க: ரஜினிக்கு இளநீர் வாங்கி கொடுக்க மறுத்த யூனிட் ஆட்கள்… அதற்கும் அசராமல் இறங்கி போன அவர் குணம்….

பெரிய தேடலுக்குப் பிறகு அவர்களுக்கு  கிடைத்தது தான் இந்த குகை. அதில் இருந்த சர்ச்சை இவர்களே செட்டாக அமைத்திருக்கின்றனர். தற்போது பேமஸ் ஆக இருக்கும் இந்த குகையில் மஞ்சுமேல் பாய்ஸ் படத்தின் ஷூட்டிங் எடுக்க அனுமதி கேட்டபோது வனத்துறை அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

ஏனெனில் 900 அடி உயரம் கொண்ட குகையிலிருந்து யாரும் விழுந்து விடக்கூடும் என்ற முன்னெச்சரிக்கை காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதாம். ஆனால் இப்படக்குழு 80 அடி வரை மட்டுமே செல்ல அனுமதி வாங்கி அங்கே சென்று மொத்த குகையையும் புகைப்படமாக எடுத்து வந்தனர். பின்னர் அதை செட்டாக போட முடிவெடுத்து இடங்களை தேடி அலைந்தனர்.

இதையும் படிங்க: கே.எஸ்.ரவிக்குமாருக்கு குடை பிடித்த ரஜினி!.. சூப்பர்ஸ்டார் அதை பண்ணதுக்கு காரணம் இருக்கு!..

பெரிய ஸ்டுடியோக்களில் நிறைய குழி தோண்ட வேண்டும் என்பதால் அதற்கு அனுமதி கிடைக்கவே இல்லையாம். அதை தொடர்ந்து பெரும்பாவூர் என்ற இடத்தில் அமைக்கப்பட்ட செட் தானாம் அது. இதை படத்தினை பார்த்த பெரும்பாலான ரசிகர்களால் கண்டுப்பிடிக்கவே முடியவில்லையாம். அத்தனை தத்ரூபமாக அமைத்து இருந்ததனர் ஆர்ட் டீம்.

கமலின் குணா படத்தினை பார்த்து அதில் இருந்து ஒரு குகையை ரீ கிரியேட் செய்து அதையே மொத்த படமாக மாற்றி சரியான நேரத்தில் கண்மணி பாடலில் இளையராஜா குரலில் இசைக்கவிட்டதுக்கு அப்ளாஸ் வாங்கி இருக்கிறது மஞ்சுமேல் பாய்ஸ் குழு.

இதையும் படிங்க: 8 நாள் கால்ஷீட் கொடுத்தேன்… ஆனா 100 நாளை தாண்டி போயிட்டே இருக்கு… வெற்றிமாறனால் புலம்பும் முன்னணி நடிகர்…

Published by
Akhilan

Recent Posts