சங்கர் கணேஷ் வாழ்வில் நடந்த மோசமான சம்பவம்... மருத்துவமனையில் சண்டை போட்ட எம்.ஜி.ஆர்... என்ன செய்தார் தெரியுமா?
இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் வாழ்வில் நடந்த ஒரு குண்டு வெடிப்பு சம்பவத்தால் அவருக்காக எம்.ஜி.ஆர் மருத்துவமனை வரை வந்து சண்டை போட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ் இசையமைப்பாளர்களான எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் டி.கே.ராமமூர்த்தி ஆகியோரிடம் உதவியாளர்களாக சினிமா வாழ்க்கையை தொடங்கியவர்கள் சங்கர் - கணேஷ். முதல்முறையாக கண்ணதாசன் தயாரிப்பில் வெளியாக இருந்த "நகரத்தில் திருடர்கள்" என்னும் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகினர்.
ஆனால் அப்படம் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. இருந்தும் இவர்கள் இருவருக்கும் கண்ணதாசனே வாய்ப்பு தேடி கொடுத்தார். அப்போது பெரிய தயாரிப்பாளராக இருந்த சாண்டோ சின்னப்ப தேவரிடம் அழைத்து சென்று இவர்களுக்காக வாய்ப்பு கேட்டார்.
அதை தொடர்ந்து மகராசி என்னும் தமிழ் படத்தின் மூலம் இருவரும் சினிமா உலகத்தில் இரட்டை இசையமைப்பாளராக அறிமுகமாகினர். இவர்களுக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது ஆட்டுக்கார அலமேலு படம் தான்.
இதில் கணேஷும் அப்போதைய பிரபல தயாரிப்பாளரான சத்யா ஃபிலிம்ஸ் வேலுமணியோட பொண்ணும் காதலிச்சிருக்காங்க. அவர்கள் காதலை அறிந்த எம்.ஜி.ஆர் இவருக்காக பொண்ணு கேட்டு திருமணத்தினை முடித்து வைத்தாராம். மேலும், உன் மனைவி எனக்கு மகள் போன்றவள். அதனால் எனக்கு நீ மாப்பிள்ளை எனக் கூறினாராம். இதனாலே இருவருக்கும் ஒரு நெருங்கி உறவு இருந்ததாம்.
இதையும் படிங்க: தடைகள்…துரதிருஷ்டம் என ஆரம்பத்தில் சறுக்கிய சங்கர் கணேஷ் இசை உலகில் எப்படி கோலூச்சினர்?
தொடர்ந்து, ஒருநாள் கணேஷ் வீட்டிற்கு ஒரு டேப்ரிக்கார்ட்டர் மற்றும் கேசட் ஒன்று வந்துள்ளது. அதை கேட்க கேசட்டை போட்டு ஆன் செய்ய டேப்ரெக்கார்ட்டர் வெடித்து விட்டதாம். அதில் கணேஷின் கை மற்றும் காலில் பலத்த அடிப்பட்டு இருக்கிறது. இதற்காக தான் கணேஷ் தனது இரண்டு கையிலும் கிளவுஸ் போட்டு வலம் வருகிறார்.
காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் காலை எடுக்க மருத்துவமனை நிர்வாகம் பரிந்துரைத்ததாம். அந்த தகவல் கேட்ட எம்.ஜி.ஆர். என்ன செய்வீர்களோ எனக்கு தெரியாது. அவன் எப்போதும் போல நடக்க வேண்டும் என மல்லுக்கு நின்றாராம். அதை தொடர்ந்து அவருக்கு செய்யப்பட்ட சர்ஜரிகள் காலை எடுக்காமல் காப்பாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.