More
Categories: Cinema History Cinema News latest news

கட்டப்பா ரோலுக்காக 33 வருடம் காத்திருந்த சத்யராஜ்… சென்னை எக்ஸ்பிரஸ் படத்துக்கு போட்ட கண்டிஷன்.. வெளியான சுவாரஸ்ய தகவல்…

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருக்கும் சத்யராஜ் எப்போதுமே தனது படங்களில் அதிக கவனம் செலுத்துவார். அந்த வகையில், அவர் 33 வருடமாக ஆசைப்பட்டு கிடைத்த படம் தான் பாகுபலி என்றால் ஆச்சரியமாக தானே இருக்கிறது.

ரங்கராஜ் சுப்பையா என்ற இயற்பெயரை கொண்டவர் நடிகர் சத்யராஜ். இவர் தமிழ் உட்பட தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் 235 படங்களில் நடித்து இருக்கிறார். நாயகனாக நடித்ததை இவரின் வில்லத்தனத்துக்கு தான் ரசிகர்கள் ஏராளம்.

Advertising
Advertising

Sathyaraj (24 mani neram)

சத்யராஜின் கல்லூரி நண்பரான மணிவண்ணன் 1984ம் ஆண்டு தமிழ் திரைப்படத்தில் முதல் முறையாக சத்யராஜை இயக்கினார். ஆனால் அந்த படத்தில் அவருக்கு ஒரு சின்ன வேடமே கொடுக்கப்பட்டது. ஆனால் அடுத்து 2013 வரை சுமார் 25 படங்களில் சத்யராஜை வைத்து இயக்கி இருக்கிறார் மணிவண்ணன். மணிவண்ணன் இயக்கிய 24 மணி நேரம் திரைப்படத்திற்குப் பிறகு வில்லனாக அவருக்கு நிறைய வாய்ப்புகள் குவிந்தது.

இதையும் படிங்க: எதிர்பாரா நேரத்தில் சத்யராஜ் கேட்ட மிகப்பெரிய உதவி… யோசிக்காமல் தலையாட்டிய கேப்டன்… என்னவா இருக்கும்?

தொடர்ச்சியாக நடித்து வந்த சத்யராஜ் மிகப்பெரிய இடத்தினை கோலிவுட்டில் பிடித்து இருக்கிறார். சின்ன வயதில் இருந்தே சத்யராஜுக்கு வரலாறு பின்னணி கொண்ட கதையில் நடிக்க வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. 24 வயதில் துவங்கிய இந்த ஆசை அவரின் 60 வயதில் தான் நடந்தது. அந்த வாய்ப்பை வழங்கியவர் ராஜமௌலி. கட்டப்பாவாக அவரின் நடிப்புக்கு அப்ளாஸ் அள்ளியது.

Sathyaraj

தமிழின் மீது அதீத பற்று கொண்டவர் சத்யராஜ். தீபிகா படுகோனேவின் தந்தையாக நடிக்க சென்னை எக்ஸ்பிரஸ் படக்குழு இவரை அணுகி இருக்கிறது. தமிழ் மொழிக்கு எந்த கலங்கத்தையும் கொடுக்க கூடாது. அப்போது தான் நடிப்பேன் என கறாராக கூறிவிட்டாராம்.

Published by
Akhilan

Recent Posts