ஒரு மாசத்தில் மூணு படம் ரிலீஸ்… வருஷத்துக்கு 28 படம் நடித்த அந்த கோலிவுட் நடிகை… அடிதூள்!..

Published on: October 4, 2023
---Advertisement---

Kollywood Actress: தமிழ் சினிமா நடிகைகளுக்கு ஒரு வருஷத்துக்கே 3 படங்கள் தான் தற்போது கிடைக்கிறது. இது தான் லேடி சூப்பர்ஸ்டார் நயன் தொடங்கி பல முன்னணி நடிகையின் நிலைமையாக இருக்கிறது. ஆனால் ஒரு கோலிவுட் நடிகை தன்னுடைய ஆட்சியை இங்கு நடத்தினார்.

பெரும்பாலான திரை நட்சத்திரங்களுக்கு அவர்கள் நடித்த முதல் படம் தான் அடையாளமாகி இருக்கும். ஆனால் சில்க் என்ற கதாபாத்திரத்தின் பெயரை தனது அடையாளமாக்கி கொண்டவர் ஆந்திராவில் விஜயலட்சுமியாக பிறந்து கோலிவுட்டுக்கு ஸ்மிதாவாக வந்தவர் தான்.

இதையும் படிங்க: வாவ் செம மெர்சலா இருக்கே!.. தலைவர் 170 லுக்குல ரஜினிய பாருங்க!.. வெளியான புகைப்படம்..

தமிழ் திரை உலகத்திற்கு 1980ல் வினு சக்கரவர்த்தியால் அறிமுகமானார். வண்டிசக்கரம் தான் இவரின் முதல் தமிழ் படம் அது இவருக்கு மிகப்பெரிய பெயரினை வாங்கி கொடுத்தது. அதற்கு முன் ஆறு படங்கள் மலையாளத்தில் நடித்திருந்தாலும் தமிழ் தான் அவருக்கு மிகப்பெரிய பெயரை தந்தது 

1982ல் தொடங்கி கிட்டத்தட்ட  96 வரை சில்க் ஸ்மிதா நடித்த படங்களின் எண்ணிக்கை 400க்கும் மேல். இது ஒரு வருடத்துக்கு சராசரியாக 28 படங்கள் அதாவது ஒரு மாதத்தில் இரண்டு அல்லது மூன்று படங்கள் வெளியாகும். குறிப்பாக 1983ல் மட்டும் இவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 45. இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி என அனைத்தும் சேர்ந்து என்றாலும் தமிழில் மட்டும் 26 படங்கள் நடித்திருந்தார். பெரும்பாலான படங்கள் குத்து பாடல்களுக்காக தான் இருந்தது.

இதையும் படிங்க: ரஜினிக்காக இறங்கி வந்த அமிதாப்பச்சன்!.. கொஞ்சம் பாத்துக் கத்துக்கோங்க ஆண்டவரே!..

ஆனால் சில குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். 1980ல் வந்த அலைகள் ஓய்வதில்லை படத்தில் தியாகராஜனின் மனைவியாக நடித்திருப்பார். அதேபோல் கோழி கூவுது என்ற படத்தில் கதாநாயகியாக பிரபுவுடன் நடித்திருப்பார். மூன்றாம் பிறை படத்தில் ஒரு வயதான கணவரின் மனைவியாக வந்து கமல் மீது ஆசைப்படுவார்.

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களான ரஜினியின் ரங்கா, மூன்று முகம், தங்க மகன், பாயும் புலி, தனிக்காட்டுராஜா, துடிக்கும் கரங்கள், தாய்வீடு, அடுத்த வாரிசு படங்களில் சில்க் நடித்திருந்தார். கமலின் சகலகலா வல்லவன், மூன்றாம் பிறை, சத்யா படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.