Categories: Cinema News latest news

8 நாள் கால்ஷீட் கொடுத்தேன்… ஆனா 100 நாளை தாண்டி போயிட்டே இருக்கு… வெற்றிமாறனால் புலம்பும் முன்னணி நடிகர்…

Vetrimaran: இயக்குனர் வெற்றிமாறன் படத்தில் நடித்தால் கண்டிப்பாக ஹிட் நடிகராக வலம் வரலாம் என்றாலும் அப்படத்துக்கு 2 முதல் 3 வருடத்தினை செலவு செய்ய வேண்டும் என்பது மறுக்க முடியாத விதியாகி விட்டது. அப்படி ஒரு முன்னணி நடிகரை கதறவிட்டு இருக்கிறார் வெற்றிமாறன்.

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு திரைப்படம் விடுதலை. இத்திரைப்படத்தை வெற்றிமாறன் எழுதி இயக்கி இருக்கிறார். இப்படத்தினை ஆர் எஸ் இன்போடெர்மன்ட் நிறுவனத்தின் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஹீரோவாக சூரி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்தனர்.

இதையும் படிங்க: ரஜினிக்கு இளநீர் வாங்கி கொடுக்க மறுத்த யூனிட் ஆட்கள்… அதற்கும் அசராமல் இறங்கி போன அவர் குணம்….

இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். முதல் பாகம் கடந்த வருடம் ரிலீஸாக மிகப்பெரிய அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகளை வெற்றிமாறன் தொடங்கினார்.

படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட 2 வருடத்துக்கும் அதிகமாக நடந்து வருகிறது. ஒரு பேட்டியில் பேசி இருந்த வெற்றிமாறன் கிளைமேக்ஸ் மட்டுமே இருக்கிறது எனவும் இன்னும் 20 நாளுக்குள் முடித்துவிடுவோம் எனவும் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் ஜனவரி, பிப்ரவரி கூட முடிந்துவிட்ட நிலையில் இன்னமும் விடுதலை இரண்டாம் பாகம் ரிலீஸாகவில்லை.

இதையும் படிங்க: கே.எஸ்.ரவிக்குமாருக்கு குடை பிடித்த ரஜினி!.. சூப்பர்ஸ்டார் அதை பண்ணதுக்கு காரணம் இருக்கு!..

Published by
Akhilan