More
Categories: Cinema News latest news

பழைய விஜய் ரீ எண்ட்ரியா?.. தரமான சம்பவத்துக்கு ரெடி ஆன தளபதி!.. பலே ஆளுயா வெங்கட்பிரபு!..

Thalapathy68: விஜய் நடிப்பில் உருவாகி வரும் அடுத்த படத்தினை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். லியோ படத்தின் வேலைகள் எல்லாம் ஓய்ந்தநிலையில் தளபதியின் காத்து இப்போ 68வது பட வேலைகளுக்குள் நுழைந்து விட்டது. அந்தவகையில் இனி தொடர்ந்து சில சுவாரஸ்யமான அப்டேட்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் தான் தற்போதையை கோலிவுட்டின் டாக் ஆஃப் தி டவுனாகி இருக்கிறார். ஒரு பக்கம் லியோ படத்தின் ரிலீஸ் வேலைகள், மறுபக்கம் தன்னுடைய 68வது படத்தின் வேலைகளில் பிஸியாகி இருக்கிறார். இந்த படத்தினை அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார்.

இதையும் படிங்க: கார் டிரைவரை கதாசிரியர் ஆக்கிய எம்.ஜி.ஆர்!.. பல ஹிட் படங்களில் கலக்கிய சம்பவம்!..

ஒருமாதம் முன்னர் விஜயை அழைத்து கொண்டு படக்குழு லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று சில விஎஃப்எக்ஸ் வேலைகளை செய்து இருக்கிறது. அதனையொட்டிய சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடந்தது. ஒருவழியாக படத்தின் படப்பிடிப்புகள் தற்போது தொடங்கப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே யுவன் ஷங்கர் ராஜா ஒரு மேடையில் பேசும்போது, சொன்ன போல முதல் படப்பிடிப்பாக ஒரு பாடலை தான் படமாக்கி இருக்கிறார்கள். பிரசாத் ஸ்டுடியோஸில் படமாக்கப்பட்ட இந்த பாடலில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆகியோர் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இது நட்பை மையப்படுத்தி அமைந்து இருக்கும் பாடல் எனக் கூறப்படுகிறது.

விஜயே டான்ஸில கில்லி. அவருடன் பிரபுதேவாவுமா அப்போ அந்த பாட்டு தெறியா இருக்குமே என இப்போதே ரசிகர்கள் செம வெயிட்டிங்கில் இருந்து வருகிறார்கள். கடந்த சில படங்களாகவே விஜயின் டான்ஸ் பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில் இந்த பாடலில் பழைய விஜயை பார்க்கலாம் என்றும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: வித்தியாசமா கெட்டப் போடுறேனு வழுக்கிடாதீங்க விஜய்… தலையில் அடித்து சொன்ன டாப் ஹிட் இயக்குனர்..!

 இந்த படத்தில் சமீபத்தில் மைக் மோகன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அரவிந்த் சாமி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தான் மோகன் மாற்றப்பட்டு இருக்கிறார். தமிழ் சினிமாவில் இதுவரை அவர் வாங்காத சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. மேலும் பிரியங்கா மோகனுக்கு பதிலாக தற்போது மீனாட்சி சௌத்ரி நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
Akhilan

Recent Posts