பிறந்தநாள் அதுவுமா இப்படியொரு சோதனையா!.. யுவனை கொலை வெறியுடன் சுத்தியால் தாக்கிய பிரபல இயக்குநர்!..

by Saranya M |   ( Updated:2023-08-31 14:53:10  )
பிறந்தநாள் அதுவுமா இப்படியொரு சோதனையா!.. யுவனை கொலை வெறியுடன் சுத்தியால் தாக்கிய பிரபல இயக்குநர்!..
X

பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு முன்பே ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த இறைவன் படம் வெளியாகப் போகிறது என அறிவிப்புகள் வெளியாகின. அதன் பின்னர் ஜவான் படத்துக்கு முன்னதாக வரும் என்றனர். ஆனால், ஜவான் படமே அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில், இன்னமும் இறைவன் படம் ரிலீஸ் தேதியே அறிவிக்கவில்லை.

இந்நிலையில், எல்லாத்துக்கும் காரணமே இறைவன் படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான் என்பதால் அந்த படத்தின் இயக்குநர் அகமது சுத்தியலை தூக்கிக் கொண்டு வந்து யுவன் சங்கர் ராஜா மண்டையிலேயே பிறந்தநாள் என்றும் பார்க்காமல் அடிப்பது போன்ற ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு யுவன் சங்கர் ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வானத்தை போல விஜயகாந்தையே ஓவர்டேக் பண்ணிட்டாரே!.. விஜய் உருவாக்கிய அன்பு தம்பிகள்!.. வைரலாகும் வீடியோ மீம்!..

என்னவொரு கொலைவெறின்னு அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் யுவன் சங்கர் ராஜா பர்த்டே அன்னைக்கே அவருக்கு டெத் டே வந்துடும் போல இப்படியா ப்ரோமோ போடுவீங்க என்றும் எல்லாத்துக்கும் அந்த நெல்சன் தான் காரணம் அவரும் அனிருத்தும் இப்படி ப்ரோமோ போட்ட நிலையில், மாவீரன் படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வினும் இசையமைப்பாளர் பரத் சங்கரும் சமீபத்தில் ஒரு கிரிஞ்ச் வீடியோ வெளியிட்டு இருந்தனர்.

இந்நிலையில், அதே பாணியை தற்போது யுவன் சங்கர் ராஜாவும் இயக்குநர் அகமதுவும் செய்துள்ள நிலையில், காமெடியாக இல்லாமல் டெரர் மோடில் இந்த ப்ரோமோ வீடியோவை உருவாக்கி உள்ளனர்.

இதையும் படிங்க: த்ரிஷாவையும் தூக்கியாச்சு! ‘விடாமுயற்சி’யில் அடுத்தடுத்து களமிறங்கும் ‘லியோ’ நடிகர்கள் – வில்லனும் அவரே

ஜெய், பிரியா ஆனந்த் நடித்த வாமனன் படத்தை இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமான அகமது ஜீவா, சந்தானம், வினய், த்ரிஷா நடித்த என்றென்றும் புன்னகை படத்தின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா நடித்த மனிதன் படத்தை இயக்கினார். அதன் பின்னர் பல ஆண்டுகள் பிரேக் எடுத்த நிலையில், ஜெயம் ரவி, நயன்தாராவை வைத்து அகமது இயக்கிய இறைவன் படம் பல ஆண்டுகளாக உருவாகி வருகிறது.

இந்நிலையில், விரைவில் அந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், அதற்கான ப்ரோமோ தான் இது என்றும் கூடிய விரைவிலேயே யுவன் மொத்த இசை வேலையையும் முடித்து படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகளை செய்வார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Next Story