Categories: Cinema News latest news

ஃபிளாப்புக்கு காரணமே ஜெயம் ரவிதான்!. புலம்பும் இறைவன் பட தயாரிப்பாளர்!. இதுல இத்தன கோடி எக்ஸ்ட்ரா!..

Iraivan Movie: இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் இறைவன். இந்த படத்தின் படப்பிடிப்பு சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்புதான் படம் ரிலீஸ் ஆனது.

கிரைம் – த்ரில்லர் அடிப்படையில் அமைந்த இந்த இறைவன் திரைப்படம் படு தோல்வி அடைந்தது. எப்படி இந்த மாதிரி கதையில் ஜெயம் ரவி நடித்தார் என்றும் ரசிகர்கள் பரிதாபப்பட்டுக் கொண்டனர்.

இதையும் படிங்க: படத்தின் தலைப்பை கேட்டு அசந்துபோய் பரிசு கொடுத்த எம்.ஜி.ஆர்.. அட அந்த சூப்பர் ஹிட் படமா!..

படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் இணைந்து பேஸ்சன் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த  நிலையில் படம் வசூலைப் பெறாததற்கு ஒருவிதத்தில் ஜெயம் ரவியும் ஒரு காரணம் என கோடம்பாக்கத்தில் கூறிவருகிறார்கள். அதாவது ஒரு பக்கம் இறைவன் ஒரு பக்கம் பொன்னியின் செல்வன் என பிஸியாக இருந்த ஜெயம் ரவி, தன் உடலை கட்டுக் கோப்பாக வைக்க வேண்டும் என்பதற்காக சில ஸ்டீராய்டுகள் மாத்திரைகளை உட்கொண்டாராம்.

இதையும் படிங்க: டிரெண்டிங்காகும் தலைவர்! அடுத்தடுத்த அப்டேட்களை தெறிக்க விடும் லைக்கா – ‘ரஜினி170’ல் இணையும் ஆக்‌ஷன் ஹீரோயின்

அதனால் அவருக்கு கல்லீரலில் பிரச்சினை ஏற்பட ஒரு மூன்று மாதத்திற்கு இறைவன் படத்திற்காக பிரேக் எடுத்துக் கொண்டாராம். ஆனால் முதலில் இறைவன் படத்திற்காக 12 கோடி சம்பளம்தான் ஜெயம் ரவிக்கு பேசப்பட்டதாம்.

பிரேக் முடிந்து ஜெயம் ரவி திரும்பினாலும் நயன் தனது திருமணம் என்று அதில் பிஸியாக இருக்க அப்போதும் படப்பிடிப்பு தாமதமாகிவிட்டதாம். சரி இருவரும் இருந்த நிலையில் திடீரென்று இயக்குனர் அஹ்மதுக்கும் உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாம்.

இதையும் படிங்க: எங்களையே புலம்பவிட்டாரே.. எக்ஸில் ட்ரெண்ட்டாகும் #WakeUp7ScreenLalith.. என்ன பாஸ் பிரச்னை?

இப்படி பல இடையூறுகளை கடந்து படப்பிடிப்பு நடந்ததால் சொன்ன கால்ஷீட்டை விட அதிக நாள்கள் தேவைப்பட்டதாம். அதனால் எனக்கு இன்னும் 2 கோடி அதிகமாக வேண்டும் என கேட்டாராம் ஜெயம் ரவி. இருந்தாலும் படத்தின் தயாரிப்பாளரும் ஜெயம் ரவி கேட்ட தொகையை கொடுத்தும் விட்டாராம்.

படத்தின் ப்ரீ ஈவண்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஜெயம் ரவி இறைவன் படத்தை குடும்பத்தோடு யாரும் சென்று பார்க்க வேண்டாம் என்ற குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார். ஒரு ஹீரோவாக இருந்து கொண்டு ஜெயம் ரவி இப்படி சொன்னது படக்குழுவினருக்கு கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தியதாம்.

ஹீரோவே இப்படி சொல்லும் போது அந்தளவுக்கு ரசிகர்கள் படம் பார்க்க வரவில்லை என்றும் இதுதான் படத்திற்கான தோல்விக்கு ஒரு விதத்தில் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

Published by
Rohini